பஹல்காம்! ஆர்சிபி! அகமதாபாத்! அடுத்தடுத்த அசம்பாவிதம்.. உலக நாடுகளின் போர் வேறு.. பயமுறுத்தும் 2025
சென்னை: பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடங்கி இப்போது நடக்கும் ஈரான் - இஸ்ரேல் போர் வரை கடந்த 6 மாதங்களில் 2025ல் ஏகப்பட்ட அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. இந்த வருடம் தொடர்ச்சியாக பல அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன.
பஹல்காமில் அட்டாக்
கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தியது.இதில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் போர்
இதையடுத்து மே மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தந்தது.
அது இரண்டு நாட்டு மோதலாக மாறியது. இரண்டு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள், டிரோன்கள், விமானங்கள் மூலம் தாக்கிக்கொண்டன. இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும். துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவமே அறிவித்தது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
ஆர்சிபி சம்பவம்
கடந்த வாரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் நடத்தப்பட்ட ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் பலியாகினர். இந்த கொடூர சம்பவம்.. விபத்து என்பதை தாண்டி சிலரின் விளம்பர மோகத்திற்காக ஏற்பட்ட மரணமாக மாறி உள்ளது. அதாவது man made disaster. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் RCB அணிக்கு ஒரு வருட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அணியின் அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெங்களூரில் RCB அணி, ஐபிஎல் பயணத்தை கொண்டாடும் வகையில் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைச் சந்தித்து உரையாடவும், பொருட்கள் வாங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வசதிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று கூறப்படுகிறது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். 11 பேர் பலியாகினர். அதிகப்படியான ரசிகர்களின் வருகையால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயமடைந்தனர். சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கே.எஸ்.சி.ஏ (KSCA) மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்கும் முன் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
விமான விபத்து
நேற்று அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். 241 பேர் இதில் பலியானார்கள்.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்குச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். இந்த விமானம் மருத்துவக் கல்லூரி அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர். இது இந்தியாவின் மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஈரான் - இஸ்ரேல் போர் - உலகப்போர் மூளும் அபாயம்
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ராணுவத் தலைவர்கள் மட்டுமல்ல, ஈரானின் ராணுவ திட்டமிடல் மற்றும் பிராந்திய செல்வாக்கு முயற்சிகளில் முக்கிய நபர்களாக இருந்தவர்கள். இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #OpTruePromise3 என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஈரான் ராணுவம் ல்வேறு ஏவுகணைகளை சுரங்கங்கள் வழியாக கொண்டு செல்ல தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும் என்று கூறப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்த உள்ளதாம். இதனால் இந்த மொத்த மோதலும் உலகபோராக மாறும் பயம் உள்ளது.












Click it and Unblock the Notifications