அமைச்சரை தெரியும்னு யாராவது வந்தால் வெளிய துரத்துங்க.. ஜூலை 1 முதல் மாற்றம்.. ராஜ்மோகன் அதிரடி
சென்னை: தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. பல்வேறு துறைகளில் அமைச்சர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். பள்ளி கல்வி துறையிலும் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் எனக்கு அமைச்சரை தெரியும் என்று யாராவது வந்தால் அவனை வெளியில் போக சொல்லுங்க. ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிரடி மாற்றம் வரப்போகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "என் சொந்த முயற்சியில் ஊடகத்தில் நுழைந்து உழைத்து முன்னேறினேன். இந்த வாய்ப்பை பயன்படுத்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, யுடியூப் மூலம் படிப்படியாக முன்னேறினேன். பணம், கார், வீடு என்று எல்லாம் வந்துவிட்டது. ஆனால் அது எதுவுமே எனக்கு போதவில்லை. முதலமைச்சர் என்னை அழைத்து வாய்ப்பு வழங்கியபோது தான் சாலையில் மரியாதை கிடைத்தது. மக்கள் கையெடுத்து வணக்கம் வைக்கிறார்கள்.

பள்ளிகளில் ஏற்படும் மாற்றம்
என் சமூகவலைதளங்களில் குழந்தைகளின் மெசேஜ் வருகிறது. பி.டி பீரியட் கட் செய்வதாக கூறுகிறார்கள். இந்த அன்பும், மரியாதையும், பாசமும் வருவதற்கு நாமும் அன்பும், மரியாதையும், கணிவாக நடந்து கொள்ள வேண்டும். கல்வியின் அப்ரோச்சை மாற்றி வண்ண படங்களையும், அலங்கார வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக வந்து செல்ல வேண்டும். இனி சிறிது காலத்தில் கோடை காலத்தில் பள்ளியை விரைந்து திறக்க வேண்டும் என சொல்லும் நிலை ஏற்படும்.
டெட் முடித்து வெளியில் காத்துகிடப்பவர்களுக்கு பள்ளிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி கொடுத்தால் சுமாரான குழந்தையே அருமையாக படிக்கும். பாசிட்டிவாக அணுக வேண்டும். அடுத்து அப்துல்கலாம் உங்கள் பள்ளியில் இருந்து கூட வரலாம். பள்ளி கட்டணத்தை வெளிப்படையாக பள்ளியிலும், இணையதளங்களிலும் வெளியிட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இதன் மூலம் நல்ல பள்ளி கூடங்களை நாடி மக்கள் வருவார்கள்.
ஜூலை 1 ஆம் தேதி
என்ஓசி, நீட்டிப்பு போன்ற எதுக்காகவும், யாருக்காகவும் நீங்கள் ஒரு ரூபாய் தர வேண்டாம். இந்த தேதியை மார்க் பண்ணிக்கோங்க. வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் என்ஓசி, நீட்டிப்பு எல்லாமே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். எனக்கு அமைச்சரை தெரியும் என்று யாராவது வந்தால் அவனை வெளியில் போக சொல்லுங்க. தனியார் பள்ளிகளில் யாரும் அரசின் பெயரை கூறி லஞ்சம் கேட்க மாட்டார்கள்" என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications