ஆளுநர் டீ பார்ட்டி + கருணாநிதி நாணயம்.. முன்னாடி வாங்க அண்ணாமலை.. ஸ்டாலின் ஏன் அப்படி சொன்னாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் நேற்று பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.

கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணா மலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

karunanidhi m k stalin annamalai

கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர்.

மரியாதை செய்தார்: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாடி வாங்க அண்ணாமலை.. என்று ஸ்டாலின் அழைத்தது கவனம் பெற்றுள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அண்ணாமலையை முன்னால் அழைத்த முதல்வர் ஸ்டாலின் கவனம் பெற்றார். அங்கே நின்ற கனிமொழி சிரித்துக்கொண்டே அவருக்கு வழிவிட்டார்.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை தேடியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் முடிவு: முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றதும், ஆளுநருடன் சிரித்துச் சிரித்துப் பேசியதும் அனைவரது புருவங்களையும் உயரச் செய்திருக்கிறது. முதலில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்த ஸ்டாலின், அதன்பின் பங்கேற்றது ஏன் என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இணக்கம் ஏன்?: ஆளுநரின் தேநீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தால், கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு ராஜ்நாத் சிங் வரமாட்டார் என்றும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணிப்பார்கள் என்றும், புறக்கணிப்பை அண்ணாமலை வெளிப்படையாகச் சொல்வார் என்றும் செய்திகள் வந்தன.. இதனால் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் . இந்த விவகாரத்தில் சுமுகமாக செல்லலாம் என்று முடிவு எடுத்து இணக்கமாக திமுக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இ்ல.கணேசன் வீட்டு விழாவிற்கு ம்ம்தா வருகிறார்கள் என்பதால்.. தானும் வரமாட்டேன் என்று சொன்னார் அண்ணாமலை. ஆனால் அதே அண்ணாமலை இன்று ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதெல்லாம் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதால்தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கும் கூட்டணிக்கு தொடர்பில்லை என்றே திமுகவினர், பாஜகவினர் நம்மிடம் கூறுகின்றனர். இந்த இணக்கமான உறவு மத்திய மாநில அரசு இடையே இருக்க வேண்டும். அது முக்கியம். மற்றபடி கூட்டணி எல்லாம் எங்களுக்கு பாஜகவுடன் செட்டாகாது என்று திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவினரும்.. கூட்டணி எல்லாம் செட்டாகாது.. அதே சமயம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை மோடி, ராஜ்நாத் சிங் மிக அதிகமாக பாராட்டி விட்டனர். அப்படி பாராட்டாமல் இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+