மகளிர் உரிமை தொகை + தங்கம் விலை + போனஸ்.. ஜூன் 1 முதல் மாறப்போகும்.. முக்கியமான விஷயங்கள்
சென்னை: ஜூன் 1 முதல் மாறப்போகும் பல்வேறு விஷயங்கள், புதிய விதிகள், திட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். மகளிர் உரிமை தொகை தொடங்கி 8வது ஊதியக்குழு வரை பல விஷயங்கள் இதில் மாற உள்ளன.
மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் நாளை முதல் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாளை விண்ணப்பம் வழங்கப்படும் நிகழ்வு தொடங்கினாலும்.. ஜூன் முதல் வாரமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூன் இறுதிக்குள் விண்ணப்பத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு ஜூலை மாதம் வழங்கப்படும் தொகையில் புதிய பயனாளிகள் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறை புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த முறை விரிவாக்கத்தின் போது புதிதாக ரேஷன் கார்டு பெற்ற பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ரூ.1000 பணம் பெறுவதற்காக இவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெறுகிறார்கள் என்று கூறி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுக்க இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 9000 இடங்களில் இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 கோடியாக உயர்த்தப்பட உள்ளது.
8வது ஊதியக்குழு
8வது ஊதியக் குழு நியமனங்கள் தொடங்கிவிட்டன. 8வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பதவியை நிரப்புவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது, இது ஜூன் மாதம் இவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். சிலரின் நியமனம் தேர்வாகி முடிந்துவிட்டது. ஆனால் எல்லோரின் நியமனம் முடிந்த பின்பே அறிவிப்பு வெளியாகும்.
8வது ஊதியக்குழு காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயரும். எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் சம்பளம் உயரும் என்று இங்கே பார்க்கலாம். 8வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கான பிட்மென்ட் காரணி 1.78 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சம்பளம் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் வழங்கப்படும் வீட்டு லோன் கடன் புதிய உயரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் 25 லட்சம் வரை 7.44 சதவிகித வட்டியில் வழங்கப்படுகிறது. இது 30 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வழங்கப்படலாம். ஆனால் அதே வட்டி சதவிகிதம் நிலவும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை ஜூன் மாதம் 1 லட்சம் ரூபாயை அடையும் வாய்ப்புகள் உள்ளன. தங்கம் விலை 10 கிராமிற்கு 1 லட்சம் ரூபாயை மீண்டும் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மக்கள் பலரும் தங்க காயின் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக நகைக்கடைகள் தெரிவித்துள்ளன. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,808 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,990 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,410 ஆகவும் உள்ளது. ஜேபி மோர்கன் நிறுவனம் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு $4,000 வரை உயரும் என்று கணித்துள்ளனர்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில், 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தங்கத்தின் விலை சராசரியாக அவுன்ஸ் ஒன்றுக்கு $3,675 ஆகவும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $4,000/அவுன்ஸ் அளவைத் தாண்டும் என்றும் கணித்துள்ளார். இப்போது தங்கம் விலை அவ்வப்போது சரிவது போல தோன்றலாம்.
ஒரு சில வாரங்கள் வேகமாக சரிவை சந்திக்கலாம். ஆனால் கண்டிப்பாக தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 4 ஆயிரம் டாலர் வரை செல்லும். நாம் நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை தங்கம் அடைய போகிறது என்று ஜேபி மோர்கன் நிறுவனம் தங்கத்தின் விலை குறித்து கணித்துள்ளது.
1 அவுன்ஸ் தங்கம் என்பது = 31.1035 கிராம் ஆகும்.
எனவே 1 கிராம் தங்கம் அமெரிக்க டாலரில் 4000/ 31.1035 = 128.56 டாலர்கள் ஆகும்.
இப்போதைக்கு $1 = ₹83.5 ரூபாய் ஆகும்.
எனவே இந்திய ரூபாயில் 1 கிராம் தங்கத்தின் மதிப்பு 128.56 × 83.5 = ₹ 10,729 ஆகும்.
வருமான வரி தாக்கல் ITR:
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR ஜூன் மாதம் திறக்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான E Filling PORTAL இன்னும் திறக்கப்படாததால் மக்கள் தவித்து வருகிறார்கள். கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு மே.27ம் தேதி ஆகியும் திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்து உள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. e filling திறக்கப்படவில்லை என்று முதல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லோருக்கும் இந்த பார்ம் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான் சிக்கலே. இன்னும் e filling திறக்கப்படவில்லை என்பதால் ITR தக்கல்ஸ் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15ம் தேதியாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications