தமிழகத்தில் பல மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் - இன்று லிட்டர் எவ்வளவு தெரியுமா
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை பல மாவட்டங்களில் சதமடித்துள்ளது. இன்றைய தினம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ள நிலையில் சென்னையில் விரைவில் 100 ரூபாயை எட்டப்போகிறது.
Recommended Video
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை நேற்றைய தினம் லிட்டருக்கு 30 காசுகளும் டீசல் விலை 23 காசுகளும் அதிகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 106 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் 99 ரூபாய் 49 காசுகள் ஆகவும், டீசல் லிட்டர் 93 ரூபாய் 46 காசுகள் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் பல்வேறு மாவட்டங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.95 அளவுக்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக லாரி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications