முழு ஊரடங்கு சென்னையில் கடும் கட்டுப்பாடு - ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் உடனே பறிமுதல்

சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 320 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 320 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே வருபவரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழ்நாட்டில் Full Lockdown அமலானது! எவை எவை இயங்கும்? | OneIndia Tamil

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 2 வாரமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஏராளமானோர் தேவையின்றி ஊர் சுற்றி வந்தனர். காவல்துறையினர் அன்பான அறிவுரை மட்டுமே கூறியதால் அதை யாருமே பொருட்படுத்தவில்லை.

    Full curfew in Chennai - Vehicles of tourists are confiscated immediately

    இந்த நிலையில் தளர்வுகள் அற்ற கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காலை முதலே நகரின் முக்கிய பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    சென்னையில் 320 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை கண்காணிக்க 20,000 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊரடங்கை மீறி வெளியே வருபவரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சென்னையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களிடம் 2 முறை பிடிபட்டால் வாகனம் திருப்பி தரப்படாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மக்கள் தேவையில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+