தமிழகத்தில் சற்றே குறைந்த கொரோனா பாதிப்பு.. ஆனால் இருமடங்கான இறப்பு.. கவனமாக இருக்கனும் மக்களே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று நேற்றை விட பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. நேற்று மட்டும் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 23,975 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,15,948 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 29,39,923 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பை விடவும் சற்றே குறைவாக உள்ளது.

 குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 12,484 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,60,458 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,989 ஆக உயர்ந்துள்ளது.

22 பேர் உயிரிழப்பு

22 பேர் உயிரிழப்பு

கொரோனா காரனமாக தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும், அரசு மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று 11 பேர் மட்டும் உயிரிழந்த நிலையில் இன்று 22 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ​தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 8987 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 6,43,727 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

இதுவரை 5,95,48,455 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும்1,40,720 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,42,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 17,17,538 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 14,197 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

பெண்களில் இதுவரை மொத்தம் 12,22,347 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 9,778 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+