மணீஷ் பகீர் புகார்: “ஆச்சரியமாக உள்ளது.. யாரையும் உள்நோக்கத்துடன் நடத்தியதில்லை”: ககன்தீப் சிங் பேடி
சென்னை : தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தன்னை துன்புறுத்தியதாக, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் பகீர் புகார் தெரிவித்த நிலையில், அவரது குற்றச்சாட்டுகள் குறித்து ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஷ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிடிட்டு "எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்" என பதிவிட்ட நிலையில் அந்தப் பதிவை அழித்துவிட்டார்.

மணீஷ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "கடந்த ஜூன் 2021 முதல் ஜூன் 2022 வரை சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தைச் சார்ந்தவன் என்பதால் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சனையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காக்க வைத்தார். பின்னர் நாளை பார்க்கலாம் எனச் சொல்வார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. அவருடைய தொந்தரவு தாங்காமல் நான் மன அழுத்தத்திற்குச் சென்றேன். கதறி அழுதுள்ளேன். தற்கொலை செய்துகொள்ளவும் நினைத்தேன். மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றேன்." என மணீஷ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆணையராக தான் பணியாற்றியபோது, துணை ஆணையராகப் பணியாற்றிய மணீஷ் நரவனே முன்வைத்த பகீர் குற்றச்சாட்டுகள் பற்றி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் தற்போதைய சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி.
அதில், "மணீஷ் மிகவும் நல்ல அதிகாரி, சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர். அவர் அனுப்பிய கடிதத்தை படித்தேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 2 மாதத்திற்கு முன்பு கூட என்னிடம் இயல்பாக பேசினார். கோவிட் சமயத்தில் எனக்கு கீழே இருந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனித்தனியே வேலையை பிரித்துக் கொடுத்தேன். அனைவரும் இணைந்து மக்களுக்காக பணியாற்றினோம்.
நான் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டங்களில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற சாதி சண்டைகள் பலவற்றை நான் தீர்த்து வைத்துள்ளேன். எனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளை ஒருபோதும் சாதி ரீதியாக பிரித்துப் பார்த்தது கிடையாது.
எந்த ஒரு உள்நோக்கத்தோடும் நான் இதுவரை யாரையும் நடத்தியதில்லை. என்னுடைய பணி அனுபவத்தில் இதுபோன்ற புகார்கள் யாரும் என் மீது கொடுத்ததில்லை. இது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்" என சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications