சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயலுக்கு எதிராக அரண்.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் மீட்பு படை வீரர்கள்!

கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்-வீடியோ

    சென்னை: கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில்தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    இந்த புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் இந்த புயல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நாளை மதியம் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    [கஜா புயலால் சென்னையில் காலை முதல் மழை]

    மீட்பு படை வந்தது

    மீட்பு படை வந்தது

    கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் படையினர் தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டனர். இரண்டு நாட்கள் முன்பு முதற்கட்டமாக 20 ஆயிரம் வீரர்கள் வந்தனர். நேற்று இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் வீரர்கள் வந்தனர்.

    தயார் நிலையில்

    தயார் நிலையில்

    புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற இவர்கள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகம் முழுக்க தேசிய மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. போதுமான மீட்பு உபகரணங்கள், கருவிகள், படகுகள், உணவுப் பொருட்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    கடலோர படை

    கடலோர படை

    அதேபோல் கடலோர காவல் படையும் தயார் நிலையில் இருக்கிறது. கடலூர், நாகை, பாம்பன் ஆகிய கடலோர மாவட்டங்கள்தான் இந்த புயல் காரணமாக பாதிப்பை சந்திக்க உள்ளது. இதனால் மீட்பு பணிகளை செய்ய வசதியாக கடலோர காவல்படை களமிறங்கி உள்ளது.

    மக்களுக்கு அறிவுறுத்தல்

    மக்களுக்கு அறிவுறுத்தல்

    மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Gaja Storm: National Disaster Management Force takes charge in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X