2 கேஸ் சிலிண்டர் இருக்கா? அப்ப சிக்கலாயிருமே.. ரேஷன் கார்டுகள் குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேரடி ஆய்வினை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்களாம்.. ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்..

ஆனால், புதிய ரேஷன் கார்டுகளை யாருக்கும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எப்படியும் 3 மாதங்கள் கழித்துதான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
கார்டுகள்: இதற்கு காரணம், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருகிறார்களாம்..
இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம். இதனால், தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்..
அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்கின்றனர். அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டி உள்ளது..
அந்த வீட்டில், புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால், பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்வதாகவும், இவைகளை முடிப்பதற்கு எப்படியும் 3 மாதம் காலதாமதம் ஆகும் என்றும் கூறப்பட்டிருந்தன.
விண்ணப்பம்: இப்படிப்பட்ட சூழலில், மிக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனி சமையல் அறையுடன் வசிப்போர், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும்..

ஆனால் தாமதமாகி வரும்நிலையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, திடீரென கூட்டுறவுத்துறையினருடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.. இந்த கூட்டத்தில், கூட்டுறவு துறை செயலர் ஜெகந்நாதன், உணவு வழங்கல் துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழகம், கிடங்கு நிறுவன உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அறிவுறுத்தல்: இந்த கூட்டத்தில், தகுதியான நபருக்கு குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளுக்கு அனைத்து தானியங்களையும் அனுப்ப வேண்டும் என்றும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறாராம். அந்தவகையில், தனி சமையல் அறையுடன் வசிப்போர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் கிடைத்துவிடும் என்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications