அல்டிமேட்.. "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா".. கேஸ் சிலிண்டருக்கான மானியம்.. ஈஸியா விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசு வழங்கும் உஜ்வாலா யோஜனா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதற்கு தேவையான ஆவணங்கள், தகுதிகள் என்னென்ன தெரியுமா?
பெண்களின் நலனுக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையு கொண்டு வந்துள்ளது.. அதில் ஒன்றுதான், உஜ்வாலா யோஜனா திட்டம்.

யோஜனா: வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் கடந்த 2016ல் பிரதமர் மோடியால் கொண்டுவந்த திட்டத்தின் பெயர்தான் உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்..
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது.
இந்த திட்டத்தினால் இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு புதிய பயனாளிக்கும் ரூ.1,600 நிதியுதவியும் தரப்படுவதால், பயனாளிகள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.. முக்கியமாக, கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்ளலாம் அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
பெண்கள்: ஆனால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், சில அடிப்படை தகுதிகள் தேவையாக உள்ளன.. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியும்...
சிலிண்டர் கேட்டு விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இல்லாதிருக்கவும் வேண்டும். விண்ணப்பதாரர் இந்திய பிரஜையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
இதைத்தவிர, பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தின்மூலம் பலன்பெறலாம்.
என்னென்ன ஆவணங்கள்: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.
அதேபோல, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.300 மானியமும் வழங்கப்பட்டு வரும்நிலையில், வாடிக்கையாளர் ஒரு வருடத்தில் மட்டுமே 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். மேலும், பணவீக்கத்தை பொறுத்து ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
கேஷ் பேக்: அதன்படி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்த சலுகைகளை பயன்படுத்த ரொக்க பணத்தை கொடுத்து சிலிண்டர்களை வாங்காமல் அமேசான் பே (Amazon Pay), கூகுள் பே (Google pay) மற்றும் பேடிஎம் (Paytm ) உள்ளிட்ட தளத்தின் மூலமாக முன்பதிவு செய்யலாம். இதன் மூலமாக நீங்கள் சலுகைகளை பெற்று தள்ளுபடி விலையில் சிலிண்டர்களை வாங்க முடியும்.












Click it and Unblock the Notifications