2 கேஸ் சிலிண்டர் இருக்கா? புதிய ரேஷன் கார்டு + மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை.. தமிழக அரசு படுஸ்பீடு
சென்னை: பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான திட்டப்பணிகள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாம்.. இதுகுறித்து ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுகறிது.

ரேஷன் கார்டுகள்: இதனிடையே, புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு, பலரும் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. ஆனால், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருவதாக தெரிகிறது.. இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம்.
எனினும், எல்லாருக்குமே கார்டுகளை தந்துவிடாமல், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்.. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்கின்றனர்.
2 சிலிண்டர்கள்: அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று பார்க்க துவங்கி உள்ளார்கள். இந்த ஆய்வு பணி முடியவே எப்படியும் 3 மாதம் ஆகும் என்கிறார்கள். அதற்கு பிறகே. விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்கிறார்கள்..!
மற்றொருபக்கம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலரும், 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர். இதற்கான லிஸ்ட்களையும் அரசு தயாரித்து வருகிறது.. மற்றொருபக்கம் வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சல் கணக்குகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இதற்காகவே முகாம்களை நடத்தி, அஞ்சல் திட்டத்தை துவக்கி வைத்து வருகிறது.

அமைச்சர் உத்தரவு: இந்நிலையில், 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்த மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளதால், இதற்கான பணிகள் வேகமெடுத்து வருகிறதாம்.. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு இன்னும் 2 மாத காலமாவே உள்ளதால், பணிகள் துரிதமாகி உள்ளதாம்..
ஜரூர் பணி: இவைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.. இதையடுத்து, குடும்ப அட்டைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த மகளிர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.. இதுதொடர்பான லிஸ்ட்டும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். ஒருவேளை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், திமுக அரசின் இன்னொரு மணிமகுடமாகவும், பெருத்த சாதனையாகவும் இது பேசப்படும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..!!
இன்று ஆலோசனை: இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். நிதித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்...
தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த ஆலோசனை, பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications