ஹனி ட்ராப் ஆப்பு.. கர்நாடக சிங்கத்தின் “வார் ரூம்” அட்டூழியம் - யாரை சொல்கிறார் காயத்ரி?
சென்னை: கன்னடருக்கு தமிழ்நாட்டின் மீது அன்பும் இல்லை, தமிழன் என்ற பெருமையும் இல்லை என்று சாடி இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், ஹனிட்ராப் மூலமாக மற்றவர்களுக்கு தீங்கு செய்ய அதிகாரம் அளித்து வார் ரூம் மூலம் சுய விளம்பரம் செய்துகொள்வதாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார்.
சூர்யா சிவா - டெய்சி ஆடியோ சர்ச்சையை தொடர்ந்து பாஜகவில் அங்கம் வகித்த காய்த்ரி ரகுராம் திருச்சி சூர்யாவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு பாஜகவில் பதவி வழங்கிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் மறைமுகமாக காய்த்ரி ரகுராம் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்
இந்த நிலையில் காய்த்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார் அண்ணாமலை. இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக நிர்வாகம் மீதும் அண்ணாமலை மீது ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

கட்சியிலிருந்து விலகல்
குறிப்பாக அண்ணாமலை தன்னை பற்றி 150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவமானப்படுத்தியதாக சாடினார் குற்றம்சாட்டினார் காய்த்ரி ரகுராம். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்தே தான் விலகுவதாக அறிவித்தார் காய்த்ரி ரகுராம். அதன் பிறகு அண்ணாமலை மீதான காய்த்ரி ரகுராமின் விமர்சனமும் அதிகரித்து இருக்கிறது.

ட்விட்டரில் கருத்து
அந்த வகையில்தான் தற்போது ட்விட்டரில் பரபரப்பு கருத்தை முன்வைத்து இருக்கிறார் காய்த்ரி ரகுராம். அதில், "வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்கிறோம். எந்த உழைப்பும் இல்லாமல் நேரடியா தலைவர் எப்படி? வளர்ப்பு மகன் அரசியலும் வாரிசு அரசியல் தான். ஒருவரைக் காப்பாற்ற, அனைவரும் ஹனிட்ராப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.

கர்நாடகாவில் மட்டுமே எல்லாம்
அனுபவம் இல்லாததால் சாவடியில் மற்றும் களத்தில் எந்த பலத்தையும் காட்டவில்லை ஆனால் மண்டல தலைவர் மற்றும் மாவட்ட தலைவராக அனைவரையும் "உன்னை பதவியை விட்டு தூக்கிடுவேன்" மிரட்டல் விடு.. வேலையும் புகழும் கர்நாடகாவில் மட்டுமே. ஒருவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் எம்எல்ஏ சீட்டு, கட்சியில் சேர்ந்தவுடன் மாநில துணைத்தலைவர், கட்சியில் சேர்ந்தவுடன் சீட் பங்கீடு / கூட்டணி என்று பேச பதவி கொடுக்கப்பட்ட தத்தெடுக்கப்பட்ட மகன் மட்டுமே இவ்வளவு சுயநலவாதி இருக்க முடியும்.

ஹனிடிராப்
அப்படியானால், கட்சியில் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் கடின உழைப்பாளிகள். சுய விளம்பரத்திற்காக இவ்வளவு பணம் கொடுத்துவிட்டு, ஹனிட்ராப் மூலம் மற்றவர்களுக்கு தீங்கு செய்த, தவறான செய்திகளைப் பரப்புவதற்கும் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவதற்கும் உறவினர்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்த பிறகு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வார் ரூம் சுயவிளம்பரம்
இன்னும் வார்ரூம் சுயவிளம்பரம் நடக்கிறது. சாதாரண விவசாயிக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? வளர்ப்பு மகனுக்கு மட்டுமே இவ்வளவு ஆதரவு உள்ளது. மற்ற குழந்தைகள் அனாதையா? தமிழ்நாட்டில் எந்த அனுபவமும் இல்லை, தமிழ்நாட்டின் மீது அன்பும் இல்லை, தமிழன் என்ற பெருமையும் இல்லை. இந்த பெருமைக்குரிய கனடிகாவிற்கு. அவர் வளர்ப்பு மகன் என்பதால் எல்லாம் எளிதாக இருந்தது. நான் நீதிக்காக குரல் கொடுத்தது.

வளர்ப்பு மகனா?
அனைத்து பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட தலைவர்களுக்கும் நீதி. ஏனெனில் இது இப்போது வளர்ப்பு மகன் வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார். அது நகைச்சுவை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி ஆரோக்கியமான அரசியல் ஆரோக்கியமான மோடி ஜி திட்டங்கள் மோடிஜியின் சாதனைகள் மூலம் வளர்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார்ரூமில் அட்டூழியங்கள் சுய விளம்பரம் மட்டுமே." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications