சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காயத்ரி பாஜக பத்தி தப்பா பேசுறாங்க.. அண்ணாமலை இல்லைனா நானில்ல! நான் போலி மருத்துவரா? அலிஷா விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: காயத்ரி ரகுராம் பாஜகவுக்கு எதிரான தவறான கருத்துக்களை பேசி வருவதாகவும், அண்ணாமலை இல்லாவிட்டால் தான் இல்லை என்றும் அக்கட்சியின் இளைஞர் மேம்பாட்டுப்பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா மற்றும் அவரது கணவர் நவீன், சென்னை தி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நவீன், "கடந்த சில நாட்களாக அலிசா போலி மருத்துவர் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அலிசாவின் குடும்பத்தினரை தாக்கும் விதமாகவும் தன்னை தாக்கும் வகையிலும் சமூகவலைதலங்களில் பதிவிடுகின்றனர்.

வெட்டி மெரினாவில் வீசுவேன்.. அலறவிட்ட ஆடியோ விவகாரம்.. சூர்யா சிவா- டெய்சியிடம் பாஜக விசாரணை வெட்டி மெரினாவில் வீசுவேன்.. அலறவிட்ட ஆடியோ விவகாரம்.. சூர்யா சிவா- டெய்சியிடம் பாஜக விசாரணை

அலிசா கணவர் நவீன்

அலிசா கணவர் நவீன்

மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊசி போடுகிறார் என்று தெரிவித்து வருகின்றனர். அவை அனைத்தும் அவர்களின் சுய லாபத்திற்காகவும் அரசியலுக்காகவும் பரப்பப்படும் வதந்திகள். அழகு கலை சம்பந்தபட்ட விசயங்களைதான் இவர்கள் செய்தார்கள். புகைப்படங்கள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது." என்றார்.

3 ஆண்டு மருத்துவ படிப்பு

3 ஆண்டு மருத்துவ படிப்பு

தொடர்ந்து பேசிய அலிசா அப்துல்லா, "இவை என்னுடைய கிளினிக் சான்றிதழ் மற்றும் மெடிக்கல் கவுன்சில் அளித்த சான்றிதழ். எல்லா பேட்டிகளிலும் நான் 3 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு என்றுதான் சொல்லி இருக்கிறேன். நான் மருத்துவர் என்று சொல்லவில்லை. நான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றே கூறி வருகிறேன்.

பாஜக என்பதால் குறி

பாஜக என்பதால் குறி

எனது BE MS மருத்துவ படிப்பினை டெல்லியில் படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியராக இருந்து பாஜகவில் இருப்பதால் இப்படி எல்லாம் பேசுகிறார்கள். எதற்கு நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள் என்று முதலில் அனைவரும் கேட்டார்கள்.

அண்ணாமலை இல்லையென்றால் நானில்லை

அண்ணாமலை இல்லையென்றால் நானில்லை

என்னை போன்ற பெண்கள் விளையாட்டு துறைக்கு அல்லது அரசியலுக்கு வர முன்னோடியாக இருப்பேன். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன்தான் இப்படி செய்கிறார். கட்சி ரீதியாக எனக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு உள்ளது. தலைவர் அண்ணாமலை இல்லை என்றால் நான் அரசியலில் இருந்திருக்க மாட்டேன்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்


காயத்ரி ரகுராம் பல தவறான கருத்துகளை கட்சிக்கு எதிராக பரப்பி வருகிறார். என் பிரச்சனையை நான்தான் பேச வேண்டும். பாஜகவில் சில சட்டங்கள் உள்ளன. ஒரு பிரச்சனை என்றால் அதனை சரி செய்ய நேரமாகும். பிரியா இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் முகம் தெரியப்படுத்தப்படவில்ல ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் துணை இருக்கிறது.

பழைய படம்

பழைய படம்

கிளினிகில் வேறு மருத்துவர்கள்தான் மருத்துவம் செய்கிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவு. அவர்களுக்கு ஆதரவு தாருங்கள். திமுக ஏன் என்னை குறி வைத்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள். நான் பாஜக கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இந்த புகைப்படம் நான் அதற்கு முன் எடுத்தது. அப்போது யாரும் பேசவில்லை." என்றார்.

English summary
Alisha Abdullah, state secretary of the party's youth development wing, has said that Gayatri Raghuram has been speaking wrong views against the BJP .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X