அண்ணாமலை ஆருத்ரா மோசடியில் ஆர்வம் காட்டாதது ஏன்? காயத்ரி ரகுராம் நறுக் - திமுக ஃபைல்ஸால் பயனில்லையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டிஎம்கே ஃபைல்ஸ் 2 என்ற பெயரில் திமுகவினர் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்து உள்ள நிலையில் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்று கூறி டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதுடன் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு எதிராக திமுக மக்களவைத் தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் வழக்கும் தொடர்ந்தார்.

Gayathri Raghuram questions Annamalai regarding Aarudra scam and DMK Files

இந்த நிலையில் டிஎம்கே பைல்ஸ் 2 என்ற பெயரில் மேலும் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக அறிவித்த அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பெரிய இரும்பு பெட்டியை கொடுத்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அண்ணாமலை, "இன்று,
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "பினாமி மோசடி பணம், கருப்பு பணம் என்ன பயன்? புகார்களின் பயன் என்ன? ஈடி ரெய்டுகள், வருமான வரி ரெய்டுகள் மட்டுமே நடக்கும்.

அவர்கள் எந்த தகவலையும் வெளியிடுவதில்லை. ஆனால் ஒவ்வொரு ஏழைகளின் வங்கிக் கணக்கிலும் ₹15 லட்சம் பணம் சேருமா?

ஈடி மற்றும் வருமான வரிக்கு முன்பே அண்ணாமலை ஏன் பினாமிகளை அடைகிறார்? யார் யாருக்கு உதவுகிறார்கள், யார் யாரை அச்சுறுத்துகிறார்கள்? அவர்கள் பணம் பெறுகிறார்களா? அவர்கள் பினாமிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? அனைத்தும் நம் மக்களின் நேரத்தை வீணடிப்பவை.

இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காதபோது இல்லை, இதில் எங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. இவ்வளவு ஊழல் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். ஏன் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வரவில்லை? எந்த பயனும் இல்லாத இந்த பைல்களால் மக்கள் சலிப்படைகிறார்கள். இந்த நாடகம் மக்களுக்கு வேலை செய்யாது.

பினாமி 1999 ஊழல் 2004 ஊழல் மீது அவர் இவ்வளவு ஆர்வம் காட்டும் போது, அண்ணாமலை ஏன் ஆருத்ரா தங்க மோசடி மற்றும் பிற மோசடிகளில் ஆர்வம் காட்டவில்லை? அவர்கள் அனைவரும் நேரடியாக மக்கள் பணத்தில் ஈடுபட்டவர்கள். மக்கள் பணத்தை சுரண்டி அடித்து எடுத்துள்ளனர். ஏன் அதில் ஆர்வம் காட்டி மக்களின் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. ஆருத்ரா தங்க மோசடியால் காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்தார்." என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+