என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி! ’Z’ அற்பனுக்கு வாழ்வு..களத்துல சந்திப்போம்! காயத்ரி ரகுராம் சுளீர்
சென்னை : பாஜகவில் இருந்து நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என் பெயரை, தொழிலை, இளமைக் காலத்தை பறித்ததற்கும் என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நிரந்த நீக்கம்
இந்நிலையில் கடந்த வாரம் கடந்த வாரம் காயத்ரி ரகுராம் தமிழக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் பதிவு செய்த ட்வீட்டில் " நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அதிரடியாக அறிவித்திருக்கிறது.

வாட்ச் அப் மெசேஜ்
இது தொடர்பாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் J.லோகநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,"6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள், தனது சுய விருப்பத்தின் பெயரில் விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். கட்சியிலிருந்து அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் "நான் ராஜினாமா செய்கிறேன்" என்று செய்தியும் அனுப்பி இருந்தார்.

எதிர்கால முயற்சி
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை Ex.IPS ஒப்புதலின்படி திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

காயத்ரி ரகுராம் நன்றி
இந்நிலையில் பாஜகவில் இருந்து நீக்கி என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர்.

மானப் பங்கம் செய்ததற்கு நன்றி
என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி

Z பிரிவு பாதுகாப்பு
என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்" என கூறியுள்ளார். மற்றொரு ட்விட்டர் பதிவில்,"அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications