அதிமுக ஆர்ப்பாட்டத்தில் டென்ஷன் ஆன காயத்ரி ரகுராம்.. மேடையில் இருந்து இறங்கி சென்றார்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அதிமுக மகளிரணி இணைச்செயலாளர் காயத்ரி ரகுராமும் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மேடையில் நின்று கொண்டிருந்த காயத்ரி ரகுராம் திடீரென மேடையில் இருந்து கோபத்துடன் கீழே இறங்கி சென்றார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் தான் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். கோகுல இந்திரா, சசி ரேகா, ராஜலட்சுமி மற்றும் அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் உள்பட அதிமுக மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து மேடையில் ஒருவர் பின் ஒருவராக நின்றுகொண்டிருந்தனர்.
காயத்ரி ரகுராம் மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோகுல இந்திரா, மேடையில் நிற்பவர்களை மாறி மாறி நிற்க வைத்துக்கொண்டிருந்தார். அப்படித் தான் காயத்ரி ரகுராமையும் தள்ளி நிற்க வைத்தார். மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்த காயத்ரி ரகுராம் மேடையின் இறுதிக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் திடீரென காயத்ரி ரகுராம் மேடையில் இருந்து கோபத்துடன் கீழே இறங்கி சென்றார். மேடையின் கடைசியில் நிறுத்தப்பட்டதற்காக அவர் கோபத்துடன் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சில பேசிய வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை என்றும், மேடையில் வைத்து தன்னை அவமதித்ததாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதனால் தான் மேடையில் இருந்து கீழே இறங்கியதாகவும் அவர் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications