வழக்குகளில் போலீஸார் பயன்படுத்தும் போலி சாட்சிகள்.. இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சிகளை பயன்படுத்தி குற்ற வழக்குகளின் விசாரணை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பு சாட்சிகள் என்பது போலீஸாருக்கு அறிமுகமான, போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் அல்லது பயன்பெறும் நபர்கள். இவர்களை பொய் சாட்சிகளாக போலீஸார் பயன்படுத்துவதாகும்.

திருவொற்றியூர் காவல் நிலையத்தின் முதல் நிலை காவலர் செல்வகுமார் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைக்கு பால் வாங்க சென்ற போது வாசுதேவன், சரண் ராஜ், ரமேஷ், சண்முகம் ஆகிய 4 பேரும் உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயூதங்களால் தாக்கியதாக புது வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 15வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் ஆனந்தன், இருப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும் போது அவர்களை குறுக்கு விசாரணை செய்தபோது, காவல் நிலையத்தில் அதிகார பூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் வெளி வந்துள்ளதாகவும், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருப்பு சாட்சிகளை வைத்திருக்கும் சம்பவங்களும், அவர்களை எவ்வாறு விசாரணைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சிகள் முழுமையாக இல்லை என்றும் காவல் நிலையங்களில் அதிகாரபூர்வமற்ற முறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிலர் இருப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான உறுதியான சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டபட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications