“நான் உன்னை குழந்தை மாதிரி பார்த்துக்குவேன்”.. தமிழா தமிழா நிகழ்ச்சியை அதிர வைத்த பெண் யார்?
சென்னை: ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தனது காதலனிடம் காதலி மன்னிப்பு கேட்ட வீடியோ பெரிய அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இன்ஸ்டாகிராம் முழுவதும் இந்த காதல் ஜோடியின் வீடியோ தான் பேசுபொருளாகி உள்ளது. 2 கே கிட்ஸ் பலராலும் இந்த வீடியோ பாராட்டப்படுகிறது.
இன்றைய 2கே கிட்ஸ் காதலர்கள், காதல் குறித்த புரிதலில் அடுத்த கட்டத்திற்கே போய்விட்டார்கள். காதல், கல்யாணம், பிரிவு உள்பட பல்வேறு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். 15 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் காதல் விவகாரத்தில் எப்படியான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதை இன்றைய இன்ஸ்டா ரீல்ஸ்களை பார்த்தாலே புரியும். அவர்களின் உலகமே தனி உலகம்..

இந்நிலையில் ஜீ தமிழ்.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் தனது காதலனிடம் காதலி மன்னிப்பு கேட்ட வீடியோ இன்ஸ்டா முழுவதும் பேசுபொருளாக உள்ளது. அந்த வீடியோவில் வரும் பெண் என்ன பேசினார் என்பதை இப்போது பார்ப்போம். ஜீ தமிழ்.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் காதலருடன் கலந்து கொண்ட பெண் பேசுகையில், 4 வருடமாக ஒரே கல்லூரியில் ஒன்றாகவே படித்தோம்.. நான் என் காதலனை எந்த அளவிற்கு வெறுப்பேற்றி உள்ளேன் என்றால், இவன் எனக்கு வேண்டவே வேண்டாம்.. உன் கூட சுத்தமாக பேசக்கூட பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு போய்விட்டேன்..
நான் செல்போனில் எல்லாவற்றிலும் பிளாக் செய்திருப்பேன், அந்த ஓராண்டு இவன் ரொம்ப கஷ்டப்பட்டு, மெயிலில் மெசேஜ் செய்வான், கூகுள் பேவில் மெசேஜ் செய்வான்.. இப்படி எல்லா சோர்ஸிலுமே எனக்காக மெசேஜ் செய்வான்.. ஆனால் நான் எல்லாவற்றையும் ஏற்காமல் புறக்கணிக்கவே செய்தேன்.. ஆனால் எனக்கு என்று ஒரு கஷ்டம் வந்தபோது, எனக்காக நின்னவன் சார் அவன்.. அவன் என்னவன் என்பதை ரொம்ப சந்தோஷமாக சொல்லிக்கொள்கிறேன்..
இப்ப எனக்கு யார் வேண்டும் என்று கேட்டால், என் அப்பா வேண்டுமா, அம்மா வேண்டுமா அல்லது உலகத்தில் யார் வேண்டும் என்று கேட்டால், யாருமே வேண்டாம்.. இவனை ஏழு ஜென்மமும் என்கிட்ட கொடுங்க, புருஷனாக வேண்டாம்.. என் குழந்தையாக கொடுங்கள்.. என் குழந்தையாக நான் பார்த்துக்கொள்வேன் சார் என்று அந்த பெண் கூறினார்.
தொடர்ந்து தனது காதலனை பார்த்து பேசிய அந்த பெண், நான் இதுவரை நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன் பட்டு.. (அப்போது அந்த காதலன், தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதார்).. இதன்பிறகு நான் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன்.. நீ என்னை பார்த்துக் கொள்வாயா.. என்பது எனக்கு பிரச்சனை இல்லை.. நான் உன்னை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வேன்.. நான் ராஜா மாதிரி பார்ப்பேன். என்னுடன் எப்போதுமே இரு.. அது போதும் என்றார்..
அப்போது ஊடகவியலாளர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண், எனக்கா ஒருத்தான் எல்லாவற்றையும் செய்யும் போது, இதைவிட வேறு என்ன சார் வேண்டும் என்று கேட்டார். தொடர்ந்து முட்டிபோட்டு காதலனிம் மன்னிப்பு கட்ட காதலி, தொடர்ந்து காதலை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் உணர்ச்சிப்பூர்வமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வீடியோவும் இன்ஸடா முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications