ரூ.500 முதல் ரூ.30000 வரை.. கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம்: தமிழக அரசு
சென்னை: கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 சட்டம் மூலம் 48 தொழில்களுக்கு லைசன்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு டீக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. இதுகுறித்த அரசாணையும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன
தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால், அரசாணை வெளியிடப்பட்டு தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணம் செலுத்தி கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பழைய பேப்பர்கள் - லைசென்ஸ் கட்டணம்
பழைய பேப்பர்கள்-இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, "நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழில்களை உற்பத்தி மற்றும் சேவைகள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
டீக்கடைகள், 48 தொழில்கள்
5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு உட்பட்ட தொழில்களுக்கு தொழில் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் 250 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு 750 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும் லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, கிராமங்களில் தொழில் துவங்கும் முடிவில் உள்ளவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. குறிப்பாக டீக்கடை வைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் கூட டீ கடைகளுக்கு வலுவான தேவை உள்ளது.
வளரும் கிராமங்கள்
அதேபோல, விவசாயம் சார்ந்த பொருட்கள், கோழி வளர்ப்பு, சில்லறை விற்பனை கடை, விதைகள் மற்றும் உரங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழில் துவங்கவும் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.. மேலும், இட்லி மாவு பாக்கெட்டை நம்பியிருக்காமல், குறைந்த முதலீட்டில் மாவு மில் தொடங்கினால், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதுடன் மக்களின் நேரடி ஆதரவையும் பெற முடியும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது..
இந்நிலையில்தான், கிராமப்புறங்களில் தொழில் துவங்க லைசென்ஸ் கட்டணத்தை தற்போது அரசும் அறிவித்துள்ளதால், கிராமப்புற தொழில்கள் இனி அடுத்தக்கட்டத்துக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டிரைவிங் லைசென்ஸ் வயது வரம்பு மாற்றம்! ஆன்லைன் சேவைகள், RTO அலைச்சல் முடிவுக்கு வருகிறது- புது ரூல் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications