Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தில் பேஸ்ட்.. ஆசனவாயில் விழுந்த தங்க கட்டிகள்.. ஒரே பாத்ரூமில் 3 பேர்! பரபர சென்னை ஏர்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில், 3 பேர் மீது மட்டுமே அனைத்து அதிகாரிகளின் கவனமும் குவிந்திருந்தது.. பிறகு 3 பேரும் ஏர்போர்ட்டிலிருந்த கழிவறைக்குள் சென்று வந்தனர்.. இதற்கு பிறகுதான் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் குதித்தனர்.. இது தொடர்பான விசாரணையையும் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?

வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை கடத்தும் சம்பவங்கள், நம்முடைய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இந்த கடத்தல்களை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டபோதிலும், தினுசு தினுசான கடத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

Chennai Gold bar Gold paste

இதற்கெல்லாம் காரணம், உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இப்படி கடத்தி வந்து, கள்ளசந்தையில் விற்க நேரிடுகிறது.. கிலோ கணக்கிலான தங்கத்தை விமானங்கள் அல்லது கப்பல் மூலமாக கடத்துவதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு விடுகிறது.


தங்கத்தின் விலை

எனவேதான், தங்க கடத்தலை ஒழிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு துறை செயல்படுகின்றன..

இதற்கு பிறகு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைக்கவும், கடத்தல் சம்பவங்களும் மெல்ல குறைய துவங்கின. கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 175 கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ தங்கம் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக புள்ளிவிவரம் ஒன்று கூறியிருந்தது.. .

ஆனாலும், கடத்தல்கள் நூதன வடிவத்தில் தொடர்கின்றன.. சமீபத்தில்கூட சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் ஒருவர் சிக்கியிருந்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தபோது, அந்த பயணிகளை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினார்கள்.

தங்க போல்ட், நட்டுகள்

அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது பயணி மீது சந்தேகம் வலுத்தது.. அதனால் அவரை நிறுத்தி விசாரித்து, அவரது உடைமைகளையும் சோதித்தனர். அதில் மொத்தம் 99 தங்கத்திலான போல்ட், நட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதாவது தங்கத்தை போல்ட், நட்டுகள் போல மாற்றி, அவை தங்கம் என்பது தெரியாமல் இருக்க போல்ட், நட்டு மீது சாம்பல் நிற பெயிண்ட் அடித்து கடத்தி கொண்டுவந்திருந்தார்.

சுமார் 900 கிராம எடைகொண்ட 99 தங்க போல்ட், நட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..

சென்னை ஏர்போர்ட் ரகசிய தகவல்

இந்நிலையில், நேற்றைய தினம், , சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு பெரும் மதிப்பிலான தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள்..

அப்போது, துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் வந்தது.. எனவே, அந்த விமானத்தில் வந்திறங்கிய அனைவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இலங்கை நாட்டை சேர்ந்த 3 பேர், அந்த விமானத்தில் வந்திருந்தனர்.. துபாயில் இருந்து சென்னை வந்துவிட்டு, சென்னையிலிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று, மீண்டும் அங்கிருந்து கொழும்புவிற்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை மூவருமே வைத்திருந்தனர்.

கழிவறைக்கு சென்ற 3 பேர்

இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.. அந்த மூன்று பேரும், ஏர்போர்ட்டிலிருந்த பாத்ரூமுக்கு சென்றுவிட்டு, பயணிகள் உட்காரும் சீட்களில், வந்து உட்கார்ந்து கொண்டனர்.. பிறகு சிறிது நேரத்தில், இவர்கள் 3 பேரும் சென்ற அதே பாத்ரூமுக்குள், சென்னை விமான நிலைய தரைதள ஒப்பந்த ஊழியர் ஒருவர் சென்றார்.

சிறிது நேரம்கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்த அந்த நபரை அங்கிருந்த அதிகாரிகள் சோதனை செய்தனர்.. அப்போதுதான், அவரது பேண்ட் பாக்கெட்டில் உருளை வடிவத்தில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.. அதனை அதிகாரிகள் வெளியில் எடுத்து பார்த்தபோதுதான், அது தங்க பேஸ்ட் என்பது தெரியவந்தது.. தங்க பேஸ்ட்டை பாண்ட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

ஒப்பந்த ஊழியர் - தங்க பேஸ்ட்

இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதில், இலங்கை சேர்ந்த 3 பேரும் பாத்ரூம் செல்வதுபோல கழிவறைக்குள் நுழைந்து, தண்ணீர் தொட்டியில் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்துவிடுவார்களாம்.. அதே கழிவறைக்குள் ஒப்பந்த ஊழியர் சென்று தங்க பேஸ்ட்டை எடுத்து வந்து, வெளியில் இருக்கும் நபரிடம் கொடுத்துவிடுவாராம்..

ஏர்போர்ட் ஊழியர் என்பதால், யாருக்கும் சந்தேகமும் வராது என்பதால்தான் திட்டத்தை தீட்டியதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, இலங்கை பயணிகள் 3 பேர் உள்ளிட்ட விமான ஒப்பந்த ஊழியர் என 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.. அத்துடன் 4 பேரையுமே மீண்டும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள்..

அப்போது உடலின் ஆசனவாயில் பகுதியில் 2.57 கிலோ தங்க கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்களை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்குமாம்..

ஏர்போர்ட் வெளியில் தங்கத்துக்காக காத்திருந்த நபர்

ஆசனவாயில் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கைதாகியிருக்கும் விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் தந்து, வெளியில் காத்து கொண்டிருக்கும் தங்க கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரிடம் கொடுக்குமாறு சொன்னார்கள்..

உடனே அந்த ஊழியரும், எதுவும் தெரியாததுபோல், தங்கத்தை எடுத்துச் சென்று வெளியில் காத்திருந்த நபரிடம் தந்தார்.. உடனே அங்கு மறைந்திருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரையும் சேர்த்து கைது செய்தனர். இப்போது மொத்தம் 5 பேருமே, சுங்கத்துறை அதிகாரிகளின் கஸ்டடியில் உள்ளனர்.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+