Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கக் கட்டிகள், தங்க நாணயங்களுக்கு டிமாண்டு? தங்கத்துக்கு மவுசு குறைவு? தங்கக் கவுன்சில் சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் தென்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வால் பெரிய மாற்றமே நடந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஜூலை மற்றும் செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தங்கத்திற்கான டிமாண்ட் 16 சதவீதம் குறைந்துவிட்டதாம்.

தங்கத்துக்கான மதிப்பு குறையாத பட்சத்தில் தங்க நகை சேமிப்புகளும் தொடர்ந்து வருகின்றன.. சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துவிட்டது. இதனால் சாதாரண மக்களால் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்துவிட்டது.

Gold Jewellery Gold bars

10 நாட்களுக்கு முன்பு, 1 சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீபாவளிக்கு பிறகு எப்படியும் தங்கம் விலை 1 சவரன் லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.

தங்கம் நகைகள்

ஆனால், தீபாவளிக்கு பிறகுதான் நிலைமை தலைகீழாக மாற துவங்கியது.. குறிப்பாக, ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம், சமீப நாட்களாகவே சரிய துவங்கி வருகிறது. லேசாக தங்கம் விலை சரிய துவங்கியதுமே ரூ.90 ஆயிரத்துக்கும் கீழும் எப்போது குறையும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.

ஆனால் பொருளாதார நிபுணர்கள் அப்படியான உத்தரவாதத்தை தரவில்லை. காரணம், எப்போதுமே ஒரு பொருளின் விலை திடீரென உயர்ந்தால், ஒருகட்டத்தில் அதன் விலை குறையத்தான் செய்யும். ஒரு கட்டத்துக்கு பிறகு, மீண்டும் அதன் விலை உயரத்தான் செய்யும்.. அதனால் தங்கம் விலையும், ஏற்ற இறக்கத்துடன்தான் காணப்படுமே தவிர, அதிகளவுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.

கிராமுக்கு 11,300 விலை

தற்போதுகூட, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2 வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.. ஆனால், இப்போது வீழ்ச்சியை நோக்கி செல்வதாக புது தகவல் வெளியாகியிருக்கிறது.

தங்கத்தில் 16 சதவீதம் வீழ்ச்சி?

இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டதால் நுகர்வோரின் வாங்கும்
ஆர்வம் மந்தமாகிவிட்டதாம்..

உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, கடந்த வருடம் இதே காலாண்டில் 248.3 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை இந்த வருடம் 209.4 டன்னாக குறைந்துள்ளது. இருந்தாலும் தங்கம் விலை அதிகரித்ததால் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து 2,03,240 கோடியாக உயர்ந்தது.

உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக இந்தியா உள்ள நிலையில், தற்போது நகைத் தேவையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது..

தங்கத்தில் சரிவு

தங்க நகைத்தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டன்னிலிருந்து 117.7 டன்களாக சரிந்தது. எனினும் விலையின்மீது தாக்கம் காரணமாகவும், வாங்குபவர்கள் உயர்ந்த விலைக்கு வாங்கவும் தங்களை தயார்படுத்தி கொண்டதாலும், நகை விற்பனை மதிப்பு 1,14,270 கோடியிலேயே நிலைத்திருந்தது.

ஆனால் தங்கத்தை முதலீடாக வாங்கும் போக்கு அதிகரிக்க துவங்கியிருக்கிறது.. பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை முதலீட்டாளர்கள் கருதுவதால், தங்க முதலீட்டு தேவை 20 சதவீதம் உயர்ந்து 91.6 டன்களாகவும் அதன் மதிப்பு 74 சதவீதம் உயர்ந்து 88.970 கோடியாகவும் உயர்ந்துள்ளது..

அதேபோல தங்க இறக்குமதி 37 சதவீதம் குறைந்து 308.2 டன்னிலிருந்து 194.6 டன்களாகவும், மறுசுழற்சி 7 சதவீதம் குறைந்து 21.8டன்களாகவும் சரிந்தது. மொத்தமாக, 2025ல் தங்க தேவையை 600-700 டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் 9 மாதங்களில் தேவை 462.4 டன்னாக இருந்தது.

தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள்

உலகளவில் இதற்கு எதிராக, 2ம் காலாண்டில் தங்க தேவை 1,313 டனாக உயர்ந்தது. இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ஜூலையிலிருந்து செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான டிமாண்ட் 31% சரிவடைந்து விட்டதாகவும், முதலீட்டு நோக்கத்திற்காக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து நாணயங்கள் மற்றும் பார்களில் முதலீடு செய்வது 20% என உயர்ந்துள்ளதாகவும், உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

எந்த வடிவத்தில் தங்கம்?

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலுக்கான இந்தியாவிற்கான தலைவர் சச்சின் ஜெயின்
சொல்லும்போது, இந்தியர்களிடம் தங்கத்தை நகையாக வாங்கும் போக்கும் மாறி முதலீட்டு நோக்கத்திற்காக நாணயமாகவும் கட்டிகளாகவும் வாங்கும்போது அதிகரித்துள்ளது..

தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே குறையவில்லை, ஆனால், அதை எந்த வடிவத்தில் வாங்குகிறார்கள் என்பதில்தான் பெரிய மாற்றத்தை காண முடிகிறது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+