137 கிராம் தங்கம்: கல்யாணத்துக்காக ஆசையாய் பெங்களூர் கிருஷ்ணமூர்த்திக்கு தந்த தங்க நகை! இப்ப பாருங்க
சென்னை: தங்க நகை, நிலம், பணம் என்றாலே சூர்யா என்ற இளைஞருக்கு கொள்ளை பிரியம்.. அதிலும் தங்க நகைகள் தான் சூர்யாவின் குறியாக இருந்து வந்துள்ளது.. இதற்காகவே இளம்பெண்களிடம் நெருங்கி பழகி, திருமணம் செய்வதாகவும் நம்பவைத்து மோசடி செய்து வந்துள்ளார்.. கடந்த வாரம் சூர்யா கைதாகி புழல் சிறையில் உள்ளார்.. இதே போன்ற சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடந்துள்ளது.. விவரம் என்ன?
சென்னை சூளைநகர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவரிடம் மேட்ரிமோனி வெப்சைட் மூலம் நெருங்கி பழகியவர்தான் சூர்யா.

நர்ஸை திருமணம் செய்வதாக நம்பவைத்ததுடன், "பொண்டாட்டி" என்றுதான் கூப்பிடுவாராம். ஒருநாள் நர்ஸிடம், "நாம் திருமணம் முடிந்து சொந்த வீட்டில் வாழலாம், என்னிடம் கொஞ்சம் சேமிப்பில் பணம் இருக்கிறது, ஆனால் சொந்த வீடு வாங்க அந்த பணம் போதாது" என்று சூர்யா சொன்னாராம்.
உடனே நர்ஸ், பேங்க்கில் லோன் போட்டு 8 லட்ச ரூபாயும், கையிலிருந்த 9 சவரன் நகைகளையும் சூர்யாவிடம் தந்துள்ளார். அதற்கு பிறகு நர்ஸை கழட்டிவிட்ட சூர்யா, செல்போனையும் ஸ்விட்ப் ஆப் செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
தங்கம் மட்டுமே குறி
இது தொடர்பாக நர்ஸ் போலீசில் புகார் தரவும், இறுதியில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சூர்யா கைதானார். 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததுடன், அவர்களிடம் தங்க நகைகள், லட்சக்கணக்கில் பணத்தை சூர்யா மோசடி செய்ததும் தெரியவந்தது. கடந்த வாரம் சூர்யா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நீதிமன்றத்தில் வட்டாட்சியர் முன்னிலையில், நன்னடத்தை பத்திரத்தில் சூர்யா கையெழுத்து போட்டார்.. உடனே வட்டாட்சியர் சூர்யாவிடம், "நன்னடத்தை பத்திரம் என்றால் என்ன தெரியுமா?" என்று கேட்டார். சூர்யா தெரியாது என்று பதில் சொல்லவும், அந்த நன்னடத்தை பத்திரத்தை சூர்யாவுக்கு படித்து காண்பித்து, இதன்படி வாழவேண்டும் என்று எச்சரித்து ஜெயிலுக்கு அனுப்பினார்.
கட்டு கட்டாக பணம்
இப்போதும் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஒரு மோசடி சம்பவம் இதுபோலவே நடந்துள்ளது.. தெற்கு (ராமநகர்) மாவட்டம் சென்னபட்டணா அருகே ஷெட்டிஹள்ளி லே-அவுட்டை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவருக்கு அப்பிகெரேயை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 2019ல் நட்பானார்.. பிறகு இந்த நட்பு காதலாக மலர்ந்தது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
தன்னுடைய வருங்கால கணவர் கிருஷ்ணமூர்த்தி என்பதால், அவருக்கு விலை உயர்ந்த செல்போன்கள் முதல் தேவையானதை எல்லாம் செய்து வந்துள்ளார் இளம்பெண்.
ஒருகட்டத்தில் இளம்பெண்ணிடம் பணம் கேட்க ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி.. இளம்பெண்ணும், அவர் கேட்கும் போதெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தந்திருக்கிறார்..
தங்க நகைகள்
பிசினஸ் ஆரம்பிக்க போவதாகவும், பிசினஸை டெவலப் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு காரணங்களை சொல்லிபல லட்சம் ரூபாய், தங்க நகைகளை கிருஷ்ணமூர்த்தி அப்பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளார்.
பிறகு இளம்பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.. காதலையும் முறித்து கொண்டார்.. இதுகுறித்து இளம்பெண் கேட்டதற்கு, திருமணம் செய்யவும் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், தான் கொடுத்த பணம், நகைகளை திரும்ப கொடுக்கும்படி கேட்டதால், இளம்பெண்ணுக்கு கிருஷ்ணமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
3 பேரையும் தூக்கிய போலீஸ்
இதுகுறித்து சென்னபட்டணா போலீசில் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தியின் அம்மா சித்தம்மா, அண்ணன் மனோஜ் மீது இளம்பெண் புகார் அளித்தார்.
அந்த புகாரில், கடந்த 6 வருடங்களாக தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ரூ.25 லட்சம் ரொக்கம், 137 கிராம் தங்க நகைகள், 6 விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட ரூ.40
லட்சம் வரை வாங்கி தன்னிடம் கிருஷ்ணமூர்த்தி மோசடி செய்து விட்டார், பணம், நகைகளை கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications