அதுதான் சரியான நேரம்..ராக்கெட் விலை தங்கம் ஏறுது.. நகைகளை எப்போது வாங்கலாம்? ஆனந்த் சீனிவாசன் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராக்கெட்டில் ஏறிய தங்கம் இப்போது சூப்பராக போய்க்கொண்டு இருப்பதாக கூறியுள்ள பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், நாம் தங்கம் எப்போது வாங்கலாம் என்பது குறித்தும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று(அக்.,24) சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ. 58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

anand srinivasan

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது... அதிலும் நம்முடைய தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் உயர்ந்து காணப்படுகிறது.. கடந்த அக்டோபர் 18ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது.

விலை உயர்வு: மறுநாள் அக்டோபர் 19ம் தேதி, கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. பிறகு 21ம் தேதி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்பட்டது.. 23ம் தேதி கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,285க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டதால், நகைப்பிரியர்கள் குஷியாகிவிட்டனர்.

வட்டி விகிதம்: ஆனால், தங்கம் விலை இனி மேலும் உயரும் என்றே வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள்.. "வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் வட்டி விகிதம் குறையும் போது, லாபம் பெரிதாக வராது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் இதுவே முக்கியமான காரணமாகும்" என்கிறார்கள்.

இந்நிலையில், 'நாம் தங்கம் எப்போது வாங்கலாம்? என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. இது தொடர்பாக அவர் தன்னுடைய யூடியூப் வீடியோவில், "அமெரிக்காவில் தங்கம் விலை அதிகரித்துள்ளது... அங்கே தங்கம் விலை இப்போது ஒரு அவுன்ஸ் 2748 டாலர் வரை போய்விட்டது. இந்தியாவில் அந்தளவுக்கு விலை உயரவில்லை.. ஆனால், சில நாட்களில் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்கும்

பண்டிகை காலம்: 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.7965க்கு விற்கப்பட்ட நிலையில், விரைவில் ரூ.8000ஐ தாண்டிவிடும்.. அத்துடன் ஜிஎஸ்டியும் தந்து நாம் வாங்க வேண்டியிருக்கிறது.. பண்டிகை சீசனும் ஆரம்பித்துவிட்டது.. தங்கம் எப்படியும் இன்னும் 2 வருடங்களுக்கு தேவையாக உள்ளது.. அதனால், உங்கள் வீடுகளில் திருமண நிகழ்வுகள் இருந்தால், உடனடியாக இப்போதே தங்கத்தை வாங்கிப் போட்டுவிடுங்கள்.

தங்கம் விலை உயர்வால், நகைக்கடை நிறுவனங்களின் வருமானமும் உயர்ந்துள்ளது.. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் இன்னும் தங்கத்தை வாங்குவதாகவும் அதுவே தங்கம் விலை அதிகரிக்கக் காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், தங்கம் விலை உயரவே போகிறது" என்றார்.

நகைப்பிரியர்கள்: "ராக்கெட்டில் ஏறிய தங்கம் இப்போது சூப்பராக போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் கூட தங்கம் விலை ராக்கெட்டில் ஏறும்.. 24 கேரட்டும் சரி, 22 கேரட் தங்கமும் சரி இன்னும் ரூ.1000 வரை உயர வாய்ப்பு உள்ளது, எனவே, யாராவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இதுவே சரியான நேரம். இனிமேல் தங்கம் ரூ.8000க்கு கீழ் கிடைக்காது" என்று ஏற்கனவே ஆனந்த் சீனிவாசன் நகைப்பிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+