இனி தங்கத்தை கனவில்தான் நினைக்கணும் போலயே! இன்னும் ஒரு வாரத்தில் ரூ 60 ஆயிரத்தை தொட்டுடுமே!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 160 உயர்ந்து நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை சவரன் ரூ 56 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் செப்டம்பர் 23 ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 6980-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 55,840-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ 98-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 98 ஆயிரம் ஆகும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் மாதம் முதலே தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்தோமேயானால், ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது போல் ஆகஸ்ட் 26ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை என்பதாலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலைக்கே தங்கம் விற்பனையானது.

பின்னர் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 28) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,720 க்கும், கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6715க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ரூ 93.50-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 31) சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 53,560 க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6695க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து தற்போது ரூ 92-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ 92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சந்தைகளுக்கு விடுமுறையாகும். எனவே தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 2 ஆம் தேதி ரூ 200 குறைந்து சவரன் விலை ரூ 53360 க்கு விற்கப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6670க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 91-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 91 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் அதே விலையில் நீடித்தது.
செப்டம்பர் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,760 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தங்கத்தின் விலையில் குறைந்த அளவில் உயர்வதும் குறைவதுமாக இருந்தது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 12 ஆம் தேதி சவரனுக்கு ரூ 960 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ 6825 க்கும் ஒரு சவரன் ரூ 54,600 க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 95 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 95,000க்கும் விற்பனையானது.

சென்னையில் செப்டம்பர் 14- ஆம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ 6865-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் விலை ரூ 54,920 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 97 க்கும் ஒரு கிலோ ரூ 97 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. இரு தினங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 1280 உயர்ந்துள்ளது.
சென்னையில் செப்டம்பர் 20-ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் விலை ரூ 55,080க்கு விற்பனையானது. கிராம் ஒன்று ரூ 6,885-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 97.50 க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications