இனி இதுதான் டிரெண்ட்.. சல்லுனு அதிகரிக்கும் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா! ஆனந்த் சீனிவாசன் அட்வைஸ்
சென்னை: அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை உயர்வு என்பது எவ்வளவு காலம் நீடிக்கும்.. தங்கத்தை இந்த ரேட்டில் வாங்கலாமா.. இல்லை இன்னும் சில காலம் காத்திருக்கலாமா எனப் பல கேள்விகள் உங்களுக்கு வரும் இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் கொடுத்துள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கி கடந்த புதன்கிழமை தனது வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதன் எதிரொலியாக உலகெங்கும் தங்கம் விலையும் உயர்ந்தது. பல நாடுகளில் ஷேர் மார்கெட்டும் உயர்ந்தது.

வெளிநாடுகளில் உயர்ந்த அளவுக்கு இந்தியாவில் தங்கம் விலை உயரவில்லை என்றாலும் கணிசமாக உயர்ந்தே இருக்கிறது. தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,885க்கு விற்பனையாகிறது. அதேநேரம் மும்பையில் இது ஒரு கிராமுக்கு ரூ. 6,975க்கு விற்பனையாகிறது.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே தங்கம் விலை ஏற்றம் குறித்தும் ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தங்கத்தைப் பொறுத்தவரை நமது நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு விலை இருக்கும். அதன்படி சென்னையில் தங்கம் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. ஆனால், மும்பையில் இதை விட அதிகமாகவே விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.
3 காரணங்கள்: அதேநேரம் அமெரிக்காவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2564 டாலராக இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தோம் என்றால் நமது நாட்டில் தங்கம் விலை ரூ.6900ஐ தொட்டு இருக்க வேண்டும். ஆனால், ஏன் குறைவாக இருக்கிறது என்ற சந்தேகம் வரலாம். இது குறித்து விரிவாகவே பார்க்கலாம். முதலில் பங்குச்சந்தையில் கிடைக்கும் கோல்ட் பீஸ்ஸை வைத்துக் கணக்கிடக்கூடாது. அதில் சில சிக்கல் இருக்கிறது.
அடுத்து 2வது விஷயம் நமது நாட்டில் முறைகேடாகக் குறிப்பிட்ட அளவுக்குத் தங்கம் உள்ளே வரும். நமது நாட்டில் தங்கத்தை இறக்குமதி செய்ய வரி இருக்கும் நிலையில், சிலர் தங்கக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். 15%இல் இருந்து இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கக் கடத்தல் குறைந்து, அதிகாரப்பூர்வ இறக்குமதி அதிகரித்துள்ளது. ஆனாலும், தங்கக் கடத்தல் குறிப்பிட்ட அளவு தொடரவே செய்கிறது. இது ஒரு காரணம்.
இதுதான் டிரெண்ட்: அதேபோல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விலை இருப்பதாலும் துல்லியமாக நம்மால் கணக்கிட முடியவில்லை. இந்த 3 காரணங்களால் குறுகிய காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கிறது என்பதை நம்மால் கணக்கிட முடிவதில்லை. ஆனால், நீண்ட கால நோக்கில் இப்போது என்ன டிரெண்ட் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
2027 தொடக்கத்தில் 3%ஆக வட்டி விகிதத்தை வைத்திருப்போம் என்கிறார்கள். இது நடந்தால் தங்கம் விலை அதிகரிக்கக்கூடும். இதனால் அப்போது மிஸ் பண்ணிட்டோமே எனக் கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. ஆனால், ஒன்று தங்கம் விலை குறைந்தாலும் சரி, இதே நிலையில் தொடர்ந்தாலும் சரி நிச்சயம் தங்கத்தைத் தவறாமல் வாங்கலாம்" என்றார்.
அதிகரிக்கும்: அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை தங்கமாக ஏறி இருக்கிறது. சர்வதேச சந்தையில் அதிகரித்த அளவுக்கு இந்தியச் சந்தியில் அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. மத்திய அரசு இறக்குமதி வரி குறைப்பதற்கு முன்பு எந்த லெவலில் தங்கம் விலை இருந்ததோ.. இப்போது அதே நிலையை அடைந்துவிட்டது. தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்கவும்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications