அசாதாரண வீழ்ச்சியில் தங்கம் விலை! சரிவை தொட்ட தங்க நகைகள்.. உலகத்துக்கே அதிர்ச்சி: நிபுணர்கள் அலர்ட்
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு லட்சத்தை நெருங்கி சென்ற நிலையில், நடுத்தர மக்கள் கதிகலங்கி போய்விட்டார்கள்.. தங்க நகை வியாபாரிகளும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.. ஆனால், கடந்த சில நாட்களாக ஏறிய வேகத்தில் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறது.. 3வது நாளாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை குறையுமா? அல்லது மீண்டும் ஏறிவிடுமா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் சோஷியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்? ஈரான்-இஸ்ரேல் போர், பாலஸ்தீன்-ஹமாஸ்கானில் நடக்கும் போர், ரஷ்யாவில் லன்ஸ்கி விவகாரங்கள் தங்கம் விலை உயர்வில் முக்கிய காரணங்களாகும். தங்கத்தை இருப்பு வைத்து கொள்ள அனைத்து நாடுகளும் முற்படுவதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம்,.

தற்சமயம் தங்கத்தில் முதலீடு செய்ய காரணமே டிரம்ப்தான்.. அவரது நிலையற்ற தன்மை, உறுதியற்ற பேச்சுக்களாலும் தான் தங்கம் விலை ஏறியிருக்கிறது.,. அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அது நின்றுவிட்டதால், அதை டிரம்ப்பால் ஜீரணிக்க முடியவில்லை.
தங்கத்தில் முதலீடு
டிரம்ப் பதவியை விட்டு விலகினால் மட்டுமே தங்கம் விலை குறையும்.. அல்லது இரு தரப்பு பேச்சுக்களை நிறுத்த வேண்டும். இது இரண்டுமே நடந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும் என்றெல்லாம் காரணங்கள் கடந்த 2 மாத காலமாகவே சொல்லப்பட்டு வருகின்றன.
எனவேதான், கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.87,600 என்றிருந்த தங்கம் விலை, 11ம்தேதி ரூ.92 ஆயிரத்தையும், 16ம் தேதி ரூ.95 ஆயிரத்தையும், 17ம்தேதி ரூ.97 ஆயிரத்தை கடந்தும் உச்சத்தை அடைந்தது. எனவே எப்படியும் இந்த தீபாவளிக்கு ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் அல்லது வரும் டிசம்பருக்குள் லட்சத்தை கடந்துவிடும் என்றெல்லாம் நிபுணர்களால் கணிக்கப்பட்டது.
தங்க நகைகள் விலை
ஆனால், தற்போது 3 வது நாளாக விலை குறைந்து வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்து, ஒரு பவுன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஒரே நாளில் 2 முறை ஏறிய தங்கம், தற்போது ஒரே நாளில் 2 முறை சறுக்கலை சந்தித்துள்ளது.
இந்த சரிவானது நடுத்தர மக்களுக்கு ஆறுதலை தந்தாலும், இந்த விலை தொடர்ந்து சரிவை தருமா? அல்லது மறுபடியும் தங்கம் விலை எகிறிவிடுமா என்ற குழப்பத்தையும் தந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் சிலர் தங்களது கருத்துக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதன் சுருக்கம்தான் இது:
"தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு தரப்பினரும் தங்கத்தை, பங்குகளாகவும், தங்க ஒப்பந்தங்களாகவும், டாலருக்கு பதிலாகவும் வாங்கி குவித்துவிட்டனர்.
மேலும் கையிலுள்ள பணத்தையும் தங்கம் வாங்கி தங்கத்தில் முதலீடு செய்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல், வட்டிக்கு பணம் வாங்கி, அவைகளிலும் தங்கத்தையே வாங்கி குவித்துவிட்டனர்.
தங்கம் விலை மேலும் குறையுமா
இப்போது தங்களிடமுள்ள தங்கத்தை, அதிக லாபம் கிடைக்கும் என்று நினைத்து, நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனர்.. அதனால்தான் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதிலும், ஓரளவு லாபம் கிடைத்தால் போதும் என்று நினைத்து, தங்கத்தை வாங்கியவர்கள் விற்க முன்வந்துள்ளனர். எனவேதான் தங்கம் விலை குறைய துவங்கியிருக்கிறதாம்..
அதுமட்டுமல்ல, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாம். மேலும், நிதிச்சந்தையில் பணத்தட்டுப்பாடு உள்ளதாலும், தங்கம் விலை உயர்ந்து வருவதாலும், முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் தங்கம் விலை குறைய துவங்கியிருக்கிறதாம்.
இன்னும் குறைய போகிறதா?
அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.. அப்படி குறைத்தால் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.
ஆனாலும் அதிகளவுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஏனென்றால், எப்போதுமே ஒரு பொருளின் விலை திடீரென உயர்ந்தால், ஒருகட்டத்தில் அதன் விலை குறையத்தான் செய்யும். ஒரு கட்டத்துக்கு பிறகு, மீண்டும் அதன் விலை உயரத்தான் செய்யும்.. எனவே, தங்கம் விலையும், ஏற்ற இறக்கத்துடன்தான் காணப்படும்" என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications