"அந்த" இடத்தில் தங்க மாத்திரைகள்.. பெண்களா இவர்கள்.. அப்படியே ஷாக்கில் உறைந்த அதிகாரிகள்..!

தங்க கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அயன்" படத்தில் தங்கத்தை கடத்துவார்களே, அதுபோலவே சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால் ஒரு வித்தியாசம்.. இந்த கடத்தலில் ஈடுபட்டது பெண்கள்..!

கடந்த 22-ம் தேதி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வரும் பிளைட்டில் யாரோ தங்கத்தை கடத்தி கொண்டு வருவதாக சென்னை ஏர்போர்ட்டில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.. இதனால் உஷாரான அதிகாரிகள், அப்போது பிளைட்டில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

அதில் சிலர் சந்தேகப்படும்படியாக இருந்தனர்.. அதனால், அவர்களை மட்டும் ஸ்பெஷலாக சோதனையிட்டனர்.. அவர்கள் திருச்சியை சேர்ந்த கனகவல்லி 56, நிஷாந்தி 30, கலா பிரதீப் குமார் 53, ஜெயராஜ் 55, புதுக்கோட்டையை ஜெகதீஷ் 37, கபார்கான் 52, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஹக்கீம் 25, தஸ்லீம் பாத்திமா 34, ஆகியோர்தான் அவர்கள்.

 உருண்டை

உருண்டை

கடைசியில் இவர்கள் மொத்த பேருமே தங்கத்தை கடத்தினோம் என்று ஒப்புக் கொண்டனர்.. ஆனால், தங்கத்தை காணோம்.. உடலில் எங்கோ இருக்கிறது என்று மட்டும் தெரிந்ததே தவிர, எங்கு, இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. பிறகுதான், தங்கத்தை அதாவது தங்க பசையை குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி அவைகளின் மீது பாலித்தின் பேப்பர் அல்லது ரப்பரை சுற்றி மாத்திரை போல விழுங்கி விட்டுள்ளனர்.. 2 பவுன் முதல் 3 பவுன் வரையிலான உருண்டைகளை சுருட்டி விழுங்கி உள்ளனர்.

 வாழைப்பழம்

வாழைப்பழம்

இப்படி விழுங்கிவிட்டால், அந்த தங்க மாத்திரைகள் வயிற்றில் சென்று பெருங்குடலில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று கொள்ளுமாம்.. பிறகு வீட்டிற்கு வந்து, வாழைப்பழம் போன்றவைகளை சாப்பிட்டு, அவைகளை வெளியில் எடுத்து விடுவார்களாம்.. அப்படித்தான் இவ்வளவு பேரும் வயிற்றில் தங்க உருண்டைகளை வைத்து கொண்டு நின்றிருக்கிறார்கள்.

 சிகிச்சை

சிகிச்சை

இதையடுத்து, அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையும் தரப்பட்டது.. மொத்தம் 8 நாட்கள் தொடர் சிகிச்சை நடந்துள்ளது.. இப்போது வயிற்றுக்குள்ளிருந்த தங்க மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுவிட்டன.. இவர்கள் எல்லாரும் சேர்ந்து 4 கிலோ எடையுள்ள தங்க மாத்திரைகளை விழுங்கி உள்ளனர். சரியாக சொன்னால் மொத்தம் 4 கிலோ 15 கிராம் எடையாம்..

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இவைகளின் மதிப்பு 2 கோடியே 17 லட்சம் ரூபாய் ஆகும்.. இவைகள் தவிர, செயின், மோதிரம் இவைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. ஆனால், இப்படி ஒரு கேஸ் போலீசாரே பார்த்ததில்லையாம்.. எத்தனையோ வகைகளில் தங்கத்தை கடத்தி வந்திருப்பதை கண்டிருக்கிறோம் என்றும், இப்படி தங்க மாத்திரைகள் வடிவில் தங்க பசையை உருட்டி வயிற்றில் வைத்து கடத்தி வருவது இதுவே முதன்முறை என்றும் ஏர்போர்ட் அதிகாரிகள் சொல்கிறார்கள்.. இதனால் சென்னை ஏர்போர்ட்டில் மேலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+