தோண்டத் தோண்ட தங்க புதையல்?ஆந்திரா நெல்லூர் மலையடிவாரத்தில் 100 அடி பள்ளம்.. ஆடிப்போன ஆடு மேய்ப்பவர்
சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சங்கம்- காளிகிரி சாலையின் மேற்குப் பகுதியில் சிறிய மலை உள்ளது. இந்த மலைக்கு அருகே உள்ள ஒரு தனியார் நிலத்தின் வழியாக நேற்றுமுன்தினம் ஒரு மர்ம கும்பல் வந்துள்ளது.
ஒரு நிலம் உங்களுக்கே சொந்தமானதாக இருந்தாலும், அதில் கிடைக்கும் புதையல் தானாகவே உங்களுடையதாகி விடாது... இந்திய புதையல் சட்டத்தின்படி அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமாகும்.

வரலாற்று சிறப்புமிக்க அல்லது பழங்கால புதையல்களை பொறுத்தவரை, அவற்றை அரசு கையகப்படுத்த முழு அதிகாரம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை அந்த புதையலுக்கு சட்டப்பூர்வமான வாரிசுகள் யாரும் உரிமை கோராத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரின் விசாரணைக்கு பிறகு அதன் உரிமை நில உரிமையாளருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
நிலத்தில் தங்க புதையல்
அதேபோல், உங்கள் நிலத்தில் வேறொருவர் புதையலை கண்டுபிடித்தால், சட்டம் அந்த புதையலை நில உரிமையாளருக்கும் கண்டெடுத்தவருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பகிர்ந்து அளிக்க வழிவகை செய்கிறது. புதையலின் 50% நில உரிமையாளருக்கும், மீதமான 50% அதை கண்டுபிடித்த நபருக்கும் வழங்கப்படும்.
அதுவே, அரசு நிலத்தில் புதையல் கிடைத்தால், காடுகள், ரயில்வே, பொதுப்பணித் துறை நிலங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான நிலங்களில் புதையல் கிடைத்தால் அது முழுமையாக அரசுக்கே சொந்தம். அதே நேரத்தில், அதனை கண்டுபிடிப்பவருக்கு அரசு வெகுமதி வழங்கலாம். ஆனால், அது கட்டாயமில்லை என்பது நினைவில்கொள்ள வேண்டிய விஷயமாகும்..
ஆனால் சிலர் இதுகுறித்த தகவல் தெரியாததால், சில தேவையற்ற சிக்கல்களில் சிக்கிவிடுகிறார்கள்.. கடந்த டிசம்பர் மாத இறுதியில் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது..
ஆதவன் தங்க நாணயங்கள்
ஆதவன் என்ற விவசாயி தனது நிலத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சமன் செய்தபோது, 86 பழங்காலத் தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் குடுவை கண்டெடுக்கப்பட்டது. பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு அளவுக்கு தங்க நாணயங்கள் இருந்தன..
ஆனால் இது குறித்து அவர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காத நிலையில், தகவல் அறிந்து வந்த விஏஓ, மற்றும் வட்டாட்சியர் அந்த புதையலை அதிரடியாகக் கைப்பற்றினார்கள்.. தங்க காசு கிடைத்து ஒரு வார காலம் ஏன் தகவல் தரவில்லை?என்று அரசு அதிகாரிகள் அதை பற்றின விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர பிரதேசம் நெல்லூர்
இப்படிப்பட்ட சூழலில் ஆந்திர மாநிலத்தில் புதையல் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை நேற்றைய தினம் ஏற்படுத்தி விட்டது..
நெல்லூர் மாவட்டம், சங்கம் - காளிகிரி சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையடிவாரத்தில் பெரும் புதையல் வேட்டை நடந்துள்ளது... அதாவது சங்கம்- காளிகிரி சாலையின் மேற்குப் பகுதியில் சிறிய மலை உள்ளது. இந்த மலைக்கு அருகே உள்ள ஒரு தனியார் நிலத்தின் வழியாக 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ரகசியமாக நுழைந்துள்ளது..
கையோடு ஒரு மந்திரவாதியை அழைத்து கொண்டு, நள்ளிரவில் சிறப்பு பூஜைகளையும் அந்த மலையடிவாரத்தில் நடத்தியுள்ளது... நவீன கருவிகள், பாறைகளை தகர்க்கும் உபகரணங்களை அந்த கும்பல் கையில் வைத்திருந்து..
100 அடி ஆழ பள்ளம்
அந்த நிலத்தின் அடியில் புதையல் இருப்பதாக கூறி, சுமார் 100 அடி ஆழத்திற்கு பெரிய குழியை தோண்டியிருக்கிறார்கள்.. அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற கேசவுலு என்பவர், மலைப்பகுதியில் மர்ம நபர்கள் பாறைகளை அகற்றி, பள்ளம் தோண்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார்.
இதனால் ஊர் மக்கள் வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், அந்த கும்பல் மந்திரவாதியுடன் அங்கிருந்து அவசரமாகத் தப்பியோடியது. இதனால் கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்..
தங்க புதையல்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் தோண்டப்பட்டிருந்த அந்த மிகப்பெரிய ஆழமான குழியை கண்டு திகைத்து போனார்கள்..
மர்ம நபர்கள் எதற்காக இவ்வளவு ஆழமாக தோண்டினார்கள், அவர்களுக்குக் கீழே ஏதேனும் ரகசிய அறைகள் இருப்பது தெரிந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும். தப்பியோடிய அந்த 6 பேரையும் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications