பிஎப் பணம் எடுக்கணுமா? பி.எஃப். அட்வான்ஸ் எவ்வளவு எடுக்கலாம்? PF இருப்பு எப்படி அறிவது? இதோ பாருங்க
சென்னை: பிஎப் இருப்பினை நீங்கள் எப்படி அறியலாம் தெரியுமா? பிஎப் முன்பணம் எடுப்பதில் வந்திருக்கும் சலுகை என்ன தெரியுமா?
தனியார் அல்லது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்கு இருக்கும்... ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, இந்த கணக்கில் வரவு வைக்கப்படும்... ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎப் கணக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

மாத பிடித்தம்: மாத மாதம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், இதற்கென சில காலம்வரை காத்திருக்க நேரிடும். ஆனால், ஒருசில காரணங்களுக்காக குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக, பிஎப் கணக்கிலிருந்து தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காகவும், வீடு கட்டுமானம், மனை வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக, முன் பணம் பெறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் சந்தாதாரர்களுக்கு, தொகை விரைவாக கிடைக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது.
அப்ரூவல்: சந்தாதாரர் விண்ணப்பிக்கும் தொகை ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனே அப்ரூவல் கிடைத்து விடும்.
இந்நிலையில், முன் பணம் கூடுதலாகவும், விரைவாகவும் கிடைக்க, கூடுதல் பலன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் 1 லட்சம் ரூபாய் வரை, ஆன்லைனில் பரிசீலனை செய்து, 2 அல்லது 3 நாட்களில், சந்தாதாரரின் வங்கி கணக்கில் பணம் வந்து விடுமாம்.. இப்படியொரு புதிய நடைமுறையை பிஎப்., சந்தாதாரர்கள் பெரிதும் வரவேற்று வருகிறார்கள்.
இருப்பு தொகை: அதேபோல, உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.. தங்களுடைய பதிவு செய்த தொலைபேசி எண்ணில் இருந்து 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தங்களுடைய பிஎப் இருப்பு தொகை அறிந்து கொள்ள முடியும்.
அதேபோல 2 நிமிஷத்திலேயே ஆன்லைனிலும் உங்கள் இருப்பை தெரிந்து கொள்ளலாம். இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட செயலின் பெயர் உமாங் (UMANG)... இந்த ஆப் மூலம் PF பற்றின அனைத்து தேவைகளையும் ஊழியர்கள் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்..
உமாங் செயலி: உங்கள் பிஎப் இதுவரை எவ்வளவு உள்ளது என்பது மட்டுமல்லாமல், மாதம் மாதம் சரியாக பணம் செலுத்தப்படுகிறதா? பணம் எப்போது கிடைக்கும்? என்ற பல விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல, இந்த உமாங் செயலில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
- உமாங் செயலியில், EPF-க்கு சென்று "பணியாளர் மையம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.. பிறகு "ரெய்ஸ் கிளைம்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இதில் UAN எண்ணை பதிவிட்டால், பதிவு செய்யப்பட்ட போன் நம்பருக்கு OTP ஒன்று வரும். அதில் திரும்பப்பெறும் முறையை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால் போதும்.. அடுத்த 10 முதல் 15 நாட்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும்.












Click it and Unblock the Notifications