நிலங்களில் பம்ப் செட் போட்டிருக்கீங்களா? விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. மின்வாரியம் சூப்பர் முடிவு
சென்னை: விவசாயிகள் ஏற்கனவே சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருந்தால், அவர்களுக்கு இலவச மின்சாரம் தரக்கூடாது என மின்சார துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பானது, தமிழக விவசாயிகளை அதிருப்திக்குள்ளாக்கியது. எனவே, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்த வண்ணம் இருந்தன.. இப்படிப்பட்ட சூழலில், புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்ன தெரியுமா?
தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காகவே, மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.. ஆனால், மின்சார வாரியமும், அரசும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.
எனவே, ஒவ்வொரு வருடமும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. 2021ம் ஆண்டு முதல் 1.69 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், இதுவரை, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது..

இலவச மின்சாரம்
எனவே, மின் இணைப்பு வழங்க அதிக தாமதம் ஆவதால், இலவச மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சில விவசாயிகள் சொந்த செலவில் தங்களின் நிலத்தில், சோலார் எனப்படும் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்களை அமைத்துள்ளனர். அரசு மானியத்துடன் சூரிய சக்தி பம்ப் செட்களையும், சிலர் டீசல் பம்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழலில், 15 நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 8ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியானது..
அதாவது, விவசாயிகள் தாங்களாகவே, சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட்களை அமைத்திருந்தாலோ அல்லது ஏதேனும் அரசு நிறுவனங்களின் மானிய உதவியுடன் அமைத்திருந்தாலோ, விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டாம்.
சூரிய சக்தி பம்ப் செட்
விவசாயிகள் ஏற்கனவே சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருந்தால், அவர்களுக்கு இலவச மின்சாரம் தரக்கூடாது. அப்படிப்பட்ட விவசாயிகள் LT-IIIA(1) என்ற பிரிவின் கீழ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. அதாவது இந்த பிரிவில், முதல் 500 யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ.4.80, அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட் ரூ.6.95 கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது..
இது விவசாயிகளிடம் மிகுந்த அதிருப்தியை உண்டுபண்ணியது.. சோலார் மோட்டார் பம்ப் செட் அமைத்திருப்பவர்களின், விவசாய மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டாம் என்ற மின் வாரியத்தின் புதிய உத்தரவால், இலவச விவசாய மின் இணைப்பு கிடைக்காது, எனவே இந்த உத்தரவை, மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
புதிய சுற்றறிக்கை - மகிழ்ச்சி
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற்றது.. இப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இயக்குனர் மீண்டும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.
அந்த புதிய சுற்றறிக்கையில், "முந்தைய சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் விவசாய பொறியியல் துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெளியிடப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications