சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தி.. ஒரே வருடத்தில் எல்லாம் மாறப்போகிறது.. இனிமையாக போகும் பயணம்!

Google Oneindia Tamil News

சென்னை : ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடம் அல்ல 12 ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியில் இருக்கிறது வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை. வெறும் 500 மீட்டா் தொலைவு பாதையை முடிக்க முடியாத காரணத்தால் பல கிலோமீட்டர் சுற்றிச்சென்ற சென்னைவாசிகளே அடுத்த 10 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட உள்ளது . அனேகமாக அடுத்த ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை ரயில் ஓடிவிடும் என தெரிகிறது.

பறக்கும் ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கில் பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985-ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் திட்டமிடப்பட்டது.

சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தீா்மானிக்கப்பட்டது.

சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம் சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம்

தில்லை கங்காநகா்

தில்லை கங்காநகா்

மூன்றாம் கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலையை இணைக்கும், பறக்கும் ரயில் திட்டப்பணியை ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு ரயில்வே தொடங்கியது. மொத்தமுள்ள 5 கி.மீட்டரில் 4.5 கி.மீ. தொலைவுக்கு 167 தூண்களுடன் ரயில் பாதைகள் வேகமாக அமைக்கப்பட்டன ஆதம்பாக்கம் தில்லை கங்காநகா் வரை கட்டுமான பணிகள் முடிந்துள்ளன.

பிரச்சனை முடிந்தது

பிரச்சனை முடிந்தது

தில்லை கங்காநகா் - பரங்கிமலை இடையே, 500 மீட்டா் தொலைவு ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. . , ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் பகுதியில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தற்போது, இந்தப் பிரச்சினைக்கு அண்மையில் இதற்கு தீா்வு காணப்பட்டது. கொரோனா பாதிப்பால் பணிகளை உடனடியாக தொடங்கவில்லை.

வேளச்சேரி ஆதம்பாக்கம்

வேளச்சேரி ஆதம்பாக்கம்

தற்போது மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயித்து உள்ளார்கள். வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தில், முதல் கட்டமாக, வேளச்சேரி-ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்தை நீட்டிக்க அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்தப் பாதையில் உள்ள புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களின் மீதம் உள்ள பணிகளை விரைவாக முடித்து, வேளச்சேரி- ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்தை நீட்டிக்க அதிகாரிகள் ஆலோசித்தார்கள்.

விரைவில் ரயில்

விரைவில் ரயில்

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களின் கட்டுமான பணி முடிந்து, நடை மேடைகளில், கற்கள் பதிக்கும் பணி, மின் துாக்கி, நகரும் மின் ஏணி நிறுவும் பணிகளில் தாமதம் ஆனது. தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் 500 மீட்டர் தூரத்திற்கு பிரச்சனையாக இருந்த இடத்திலும் வேலைகள் தொடங்கி உள்ளன அனைத்து பணிகளும் அடுத்த ஜூலையில் நிறைவு பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பணிகள் முழுமையாக முடிந்த பிறகு ரயில் சேவை அடுத்த ஆண்டு இதே மாதத்திற்குள் தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
The Velachery-Parangimalai railway line has been in limbo for more than 12 years. The work is expected to be completed in the next 10 months. The Velachery-Parangimalai train is likely to run next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X