Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஸ்டாலின் தந்த குட்நியூஸ்.. சொந்த வீடு கட்டுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடுகளை வழங்கும் புதிய உத்தரவாத திட்டமாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.... இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தை "குடிசை இல்லா மாநிலமாக" மாற்றுவதுதான்.. எனவேதான் தமிழக அரசு இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.. இன்றைய தினம்கூட இத்திட்டம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குட்நியூஸ் ஒன்றை அறிவித்திருக்கிறார்.. அது என்ன தெரியுமா?

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் வசிக்கும் குடிசை இல்லாத, ஓட்டு வீடுகளில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.3,50,000 மானியத்தில் ஆர்சிசி கூரையுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.. இதனால் ஏராளமானோர் நேரடியாகவே பலனை பெற்று வருகிறார்கள்..

இந்த திட்டத்தின் மூலம், வீடுகளுக்கான கட்டுமான பணிகள், கட்டுமான பொருட்கள் மற்றும் தேவையான வசதிகள் அரசு வழங்கும் விதமாகும். பயனாளர்கள் விரும்பினால் ரூ.1,50,000 வரை கடனும் வங்கிகள் மூலம் பெறலாம்.

கலைஞரின் கனவு இல்லம்

கட்டப்படும் வீடுகள் 360 சதுரஅடி பரப்பளவில் சமையல் அறை கொண்டதாக இருக்கும். 300 சதுரஅடி ஆர்சிசி கூரை, மீதமுள்ள பகுதி பயனாளியின் விருப்பப்படி தீற்றாத பொருட்கள் கொண்டு கட்டப்படும். சுவர்கள் இன்டர்லாக் சிஸ்டம், செங்கல், ஏஏசி பிளாக் போன்ற பொருட்களால் மட்டுமே அமைக்கப்படும்...

கட்டுமான செலவை குறைக்க தொழில்நுட்ப உபகரணங்களையும் அரசு அனுமதிக்கும்; TANCEM நிறுவனத்திலிருந்து குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் அரசு அனுமதியுள்ள சப்ளையர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் பெற முடியும்.

தகுதிகள் - ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும். கிராமப்புற ஏழை மக்கள், வீடுகள் கட்டுவதற்கு தேவையான குறைந்தபட்ச நிலம் 360 சதுரஅடி மற்றும் பட்டா கொண்டவர்கள் முன்னுரிமை பெறுவார்கள். ஏற்கனவே சொந்த வீடு கொண்டவர்கள், வணிக அல்லது வாடகை நிலமாக பயன்படுத்தும் நிலம் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமான சான்றிதழ், பட்டா மற்றும் சிட்டா, வங்கி கணக்கு விவரங்கள், முகவரி சான்று போன்றவை அடங்கும்.

முதலமைச்சர் இன்று குட் நியூஸ்

இந்தத் திட்டம் மூலம் தமிழகத்தில் ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடு இருப்பது உறுதி செய்யப்படும், குடிசை இல்லாத மற்றும் வசதியான வாழ்விடம் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தை "குடிசை இல்லா மாநிலமாக" மாற்றுவது ஆகும். இதற்காக 2030ம் ஆண்டிற்குள் அரசு இலக்கு நிர்ணயித்து 1 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.

இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே புது வீடு கட்ட திட்டமிடுபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படியான தகவல் ஒன்று இன்று வெளியாகி உள்ளது..

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு லட்சம் வீடுகள் இந்த ஆண்டு கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி இன்று சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், "கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இந்த வருடம் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன" என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது புது வீடு கட்டும் திட்டத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்த வருடம் ஒரு லட்சம் வீடுகள் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளதால், பலரும் இதன்மூலம் பலன் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யார் யாருக்கு கிடைக்கும் - விண்ணப்பிக்கலாம்

குறைந்தபட்சம் 360 சதுர அடி சொந்த நிலமும் தனிப்பட்ட பட்டாவும் கொண்டவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள் அல்லது குடிசையில் ஓடு, கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போன்ற பகுதி கூரைகள் இருந்தாலும் தகுதியில்லை.

பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டு, மூன்று தவணைகளில் ஒற்றை சாரள கணக்கு மூலம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

முன்னதாக அரசின் கணக்கெடுப்புகளில் விடுபட்ட குடிசைவாசிகள், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கிராம சபை ஒப்புதல் பெற்ற பின் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இலக்கின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

யார் யாருக்கு கிடைக்காது

புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது. இத்திட்டத்தில் ரூ.3.10 லட்சம் நிதியாகவும், மீதமுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பி போன்ற கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+