ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை வாங்க போறீங்களா... அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்ற வருடம் சேலத்தில் சில ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு போன்றவை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது. இது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

மேலும், துவரம் பருப்பு, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பாக்கெட்டுகளாக வழங்க திட்டமிட்டு வருகிறோம். அதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதலில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் சில நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. அதனை போக்கும் வகையில், தற்போது மின் டெண்டர் முறையில் திறந்த மற்றும் வெளிப்படையானதாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Good News from the Tamil Nadu Government for Those Buying Toor Dal and Sugar at Ration Shops

அதேபோன்று, தனித்தனி சமையலறை வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். ஒரே வீட்டில் வசிப்பவர்களிடம் இருந்து பல விண்ணப்பங்கள் வருவதால் அவை நிராகரிக்கப்படும்.

நெல் கொள்முதலின்போது, விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. ஆனால், நெல் கொள்முதல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து ஒரு மூட்டைக்கு ரூ.10 பெற வேண்டும். நிர்வாக காரணங்களால் பணம் வழங்க தாமதம் ஏற்படாமல் இருக்க உடனடியாக பணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் வெங்கடரமணன் கூறினார்.

பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருவதால், 1 கிலோ அல்லது அரை கிலோ என்பது ஒரு கிராம் கூட குறையாமல் மக்களுக்குத் துல்லியமாகக் கிடைக்கும். எடையில் ஏமாற்றப்பட வாய்ப்பே இல்லை. திறந்தவெளியில் பொருட்கள் இருக்கும்போது தூசி, வண்டுகள் அல்லது ஈரப்பதம் பட்டுப் பொருட்கள் வீணாகலாம். பாக்கெட் செய்வதால் பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தரம் மாறாமலும் மக்களுக்குச் சென்றடையும்.

கடைகளில் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தராசில் அளந்து போடும் வரை மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. பாக்கெட்டுகளை டக்கு டக்கு என வாங்கிச் செல்லலாம் என்பதால் கூட்ட நெரிசல் குறையும். தினமும் நூற்றுக்கணக்கான கார்டுதாரர்களுக்குப் பொருட்களை ஒவ்வொன்றாக எடைப் போட்டுக் கொடுப்பது ஊழியர்களுக்குப் பெரிய வேலைப்பளு. பாக்கெட் முறையில் அவர்களின் உடல் உழைப்பு பெருமளவு மிச்சமாகும்.

திறந்தவெளி மூட்டைகளில் இருந்து எடுத்துப் போடும்போது, கீழே சிந்துவதாலும் கசிவதாலும் கடைசியில் ஊழியர்களுக்குக் கணக்கில் 'பொருட்கள் பற்றாக்குறை' ஏற்படும். பாக்கெட் முறையில் இந்தத் தலைவலி அவர்களுக்கு முற்றிலும் நீங்கும். மக்களுடன் தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கப்படும்: "எடை கம்மியா இருக்கு" என்று பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ரேஷன் கடைகளில் அடிக்கடி நடக்கும் சண்டைகளுக்கு இந்த முறை முற்றுப்புள்ளி வைக்கும்.

இந்தத் திட்டம் வரவேற்புக்குரியது என்றாலும், இதைச் செயல்படுத்தும் போது அரசுக்கும், உணவுப் பொருள் நுகர்வோர் கழகத்திற்கும் சில முக்கிய சவால்கள் உள்ளன. பொருட்களைத் தனித்தனியாகப் பாக்கெட் செய்வதற்குத் தனியான இயந்திரங்கள், பாக்கிங் கவர்கள் மற்றும் கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். இதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் பாக்கெட்டுகளில் பொருட்கள் வழங்கப்படும் போது, டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க மட்கும் தன்மை கொண்ட கவர்களைப் பயன்படுத்துவது அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

ஆலைகளி பொருட்கள் பாக்கெட் செய்யப்படும் போதே, அங்கு எடைக் குறைபாடோ அல்லது தரம் குறைந்த பொருட்களோ அடைக்கப்படாமல் இருப்பதை அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முறைகேடுகளைத் தடுத்து, மக்களுக்குத் தரமான உணவுப் பொருட்கள் விரைவாகக் கிடைக்க வழி செய்யும் ஒரு சூப்பர் திட்டம் இது. ஆனால், பேக்கிங் செலவுகளையும் பிளாஸ்டிக் பயன்பாட்டையும் அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இதில் இருக்கும் ஒரே சவால்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+