காய்கறிகள் மட்டுமல்ல மளிகை பொருட்களும் வீட்டுக்கே வரப்போகிறது.. குட்நியூஸ்
சென்னை: காய்கறிகள் மட்டுமல்ல மளிகை பொருட்களும் போன் செய்தாலே வீடு தேடி வரும் நாளை முதல் நடைமுறைக்கு வரப்போகிறது. எனவே கூட்டம் கூட்டமாக கடைக்கு போய் கொரோனா என்ற விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம். இன்றைய அலட்சியம் மற்றும அஜாக்கிரதை எல்லோரையும் பெரிய அளவில் பாதிக்கும்.
தமிழகத்தில் நாளை முதல் 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வந்து கொரோனாவில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே அரசு இந்த ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதுமே நாளை முதல் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி/ பழங்கள் ஆகியவை மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி/ஊராட்சி அமைப்புகளின் மூலம் வாகனங்களில் (மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்) பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.

விநியோகம்
தமிழகம் முழுவதுமே நாளை முதல் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி/ பழங்கள் ஆகியவை மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி/ஊராட்சி அமைப்புகளின் மூலம் வாகனங்களில் (மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்) பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.

வீடு தேடி வரும்
இந்த வாகனத்தின் மூலம் காய்கறி/பழங்கள் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் இதற்கான அனுமதி சீட்டினை மாநகராட்சி/நகராட்சி/ பேரூராட்சி/ ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலகர்கள் ஆகியோரை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அனுமதி பெற்றவ்ரகள் காலை 6மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். ஒரே பகுதியில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் வியாபாரம் செய்யக்கூடாது. என்றும் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது.

தொலைபேசி வழியாக
மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நேரடியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை. எனினும் வாடிக்கையாள்ர்கள் தொலைபேசி வாயிலாக மளிகை பொருட்கள் கோரும் நேர்வில் கடை பணியாளர்கள் மூலம் நேரடியாக வீட்டிற்கு காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை விநியோகம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவசாய விளை பொருட்கள் இடுபொருட்கள் எடுத்து செல்லவும் அனுமதி அளித்துள்ளது.

அழையா விருந்தாளி
மக்களே நாளை முதல் மளிகை மற்றும் காய்கறிகள் வீடு தேடி வரும். எனவே இன்று கடைகளில் கூடி கொரோனாவை அழையா விருந்தாளியாக வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். உங்களையும், உங்கள் மொத்த குடும்பத்தையும் வெகுவாக பாதித்துவிடும். முதல் அலை போல் அல்ல. இந்த கொரோனா 2வது அலை. பாதிப்பும் சரி, உயிரிழப்பும் சரி, அதிக அளவில் ஏற்படுத்தி வருகிறது. போதாதகுறைக்கு கரும் புஞ்சை தொற்றும் ஏற்படுகிறது. பொறுப்புடன் செயல்படுங்கள்.












Click it and Unblock the Notifications