சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. ஈஸியாக பயணம்
சென்னை: பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவையை,மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையங்களிலும் ரேபிடோ பைக் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பைக் டாக்ஸி சேவையை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பெண்கள், அச்சமின்றியும், மிக குறைந்த கட்டணத்தில் எளிதாக தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும். அதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வீடுகளில் இருந்து குறைந்த கட்டணத்தில் வர முடியும் என்பதால் இந்த சேவைக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
தற்போதைய நிலையில் நந்தனம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய ரயில் நிலையங்களில் ரேபிடோ பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரேபிடோ நிறுவனத்துடன் இணைந்து பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவத்ததாவது: மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பன மற்றும் நம்பகமான இணைப்பு வாகன சேவை வழங்குவதில் நோக்கமாக கொண்டுள்ளது. பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை தொடங்கி உள்ளது.
நிலையான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இச்சேவையில் பெண்களால் இயக்கப்படும் 50 பைக்குகள் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்களால் இயக்கப்படும் இந்த பைக் சேவை வசதி முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்படுகிறது. தேவை மற்றும் சேவையின் அடிப்படையில் பின்னர் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications