பிரபல நடிகர் எம்ஜிஆர்.. நிஜமாவே "தங்க பஸ்பம்" சாப்பிட்டாரா? "அதை" தொட்டாலே.. அட, விடையே கிடைச்சாச்சு
சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நிஜமாகவே தங்கபஸ்பம் சாப்பிட்டாரா? இந்த கேள்வி இன்னமும் எம்ஜிஆர் ரசிகர்களிடம் வட்டமடித்து கொண்டேயிருக்கிறது என்றாலும், இதற்கு என்றோ விடையும் தெரிந்துவிட்டது.
தமிழ் சினிமாவில், தயாள குணம் படைத்த மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மக்கள் திலகம் எம்ஜிஆர்தான்... அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி, இன்று வரை மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது.
பரபரப்பு: அதேபோல, எம்ஜிஆர் குறித்த கதைகள், கற்பனை கொண்ட தகவல்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வட்டமடித்தபடியே இருக்கும்.. பத்திரிகைகளிலும் இவைகள் தவறாமல் இடம்பெற்றபடியே இருக்கும்.
குறிப்பாக, எம்ஜிஆர் அணிந்திருந்த கண்ணாடி எக்ஸ் ரே தன்மை கொண்டது என்பார்கள்.. எம்ஜிஆர் அணிந்திருந்த வாட்ச் இன்னமும் அவரது சமாதியில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பார்கள்.. தினமும் பாலில் கலந்து தங்கபஸ்பம் சாப்பிடுவார் என்பார்கள்.. ஆனால், இதில் எது உண்மை? எது பொய்? என்று பெரும்பாலானோரால் அறியமுடியவில்லை..
தங்கபஸ்பம்: தங்கபஸ்பத்தை எம்ஜிஆருடன் தொடர்புபடுத்தி பேசுவதற்கு காரணம், அவரது தொப்பி, கண்ணாடியையும் தாண்டி, தங்கம் போல் ஜொலிஜொலிக்கும் அவரின் நிறம்தான்... தங்க பஸ்பம் சாப்பிடுவதால்தான், எம்ஜிஆர் பொன்னிறம்போல் ஜொலிப்பதாக சொன்னார்கள்.. தங்கபஸ்பம் சாப்பிட்டால் இளமையை தருவதுடன், நீண்ட ஆயுளை தருகிறது என்று சித்த மருத்துவத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை நிஜமாகவே எம்ஜிஆர் தங்கபஸ்பம் சாப்பிட்டாரா? என்று, எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புடையவரும், மூத்த பத்திரிகையாளரான, இதயக்கனி விஜயன் அவர்களிடம் கேட்டோம். நம்முடைய ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக, அதற்கான பதிலை தந்துள்ளார் இதயக்கனி விஜயன்.
விளக்கம்: "சென்னையில் ஆணழகன் விழா ஒன்று நடைபெற்றது.. இந்த விழாவில் எம்ஜிஆர் பேசும்போது, இந்த தங்கபஸ்பத்துக்கு அவரே ஒரு விளக்கத்தை தந்தார்... பல பேருக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவதால்தான் நிறமாகவும், உடல் திடமாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. ஒரு குண்டூசி முனையில் தங்கத்தை தொட்டு பாலிலோ அல்லது நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள். அளவு அதிகமானால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
உடலை பாதுகாப்பது மனதை பொறுத்தது. நமக்கு வயதாகிவிட்டதே என நினைக்காமல் 'நமக்கு என்ன வயதாகிவிட்டது' என நினைத்தால் வயோதிகம் நம்மை நெருங்காது. மற்றவர்கள்தான் என் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். நான் அதுபற்றி நினைப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
முற்றுப்புள்ளி: இதை நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக கூறுகின்றேன் என்றால் எனக்கு இன்னும் என்ன வயது என்று நான் எண்ணத் தயாராக இல்லை'' என்று விளக்கமளித்தார் எம்ஜிஆர்.. அதற்கு பிறகுதான், இந்த வதந்தி ஓரளவு அடங்கியது" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications