அரசு கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. ரூ. 50 தான் விண்ணப்ப கட்டணம்! முழு விவரம்!
சென்னை: அரசு கலை கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (மே 6ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வாக்கில் வெளியிடப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடையும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
www.tngasa.com என்ற இணையதள முகவரியில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நேரடி சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க, விண்ணப்பக்க கட்டணமாக ரூ. 48 + பதிவுக் கட்டணமாக ரூ. 2 என மொத்தமாக ரூ. 50 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதும்.
கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மூலம் செலுத்தலாம் என்றும், இணையம் வாயிலாக செலுத்த முடியாதவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கவுன்சிலிங் கால அட்டவணையை www.tngasa.com இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications