சென்னை அரசு பஸ்ஸில்.. டக்குன ஏறி உட்கார்ந்தது யார் பாருங்க.. ஒரே செகண்ட்தான்.. அலறிய பயணிகள்
சென்னை: சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. கொஞ்ச நேரத்தில் கதிகலங்கி போய்விட்டார்கள் பயணிகள்.
சென்னை வண்டலூரில் இருந்து, பிராட்வே பஸ் ஸ்டாண்டுக்கு, அரசு பஸ் வந்தது.. அதாவது மாநகர பேருந்து 21G என்ற நம்பர் கொண்ட பஸ் வந்தது... அந்த பஸ்ஸை டிரைவர் இளங்கோவன் என்பவரும், கண்டக்டர் கோவிந்தராஜன் என்பவரும் ஓட்டிவந்தனர்.

அரசு பஸ்: பஸ்ஸுக்குள் நிறைய பயணிகள் இருந்தனர்.. அப்போது, பஸ் ஸ்டாண்டில், பஸ்ஸை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி டிப்போவுக்குள் நுழைந்தனர்.. நேர காப்பாளரிடம் பதிவு புத்தகத்தில் எழுதுவதற்காக இருவரும் சென்றார்கள்.. அப்போது டிரைவர் இளங்கோவன், பஸ்ஸிலேயே சாவியை விட்டுவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டார்.
இந்த நேரம்பார்த்து, ஒரு இளைஞர் நின்றுகொண்டிருந்த அந்த பஸ்ஸுக்குள் ஏறினார்.. அவருக்கு 25 வயதிருக்கும்.. மனநலம் பாதிக்கப்பட்டவராம்.. பஸ்ஸுக்குள் ஏறி இங்கும் அங்கும் ஓடினார்.. சுற்றுமுற்றும் பார்த்தார்.. பிறகு, நேராக போய், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்..
பயணிகள்: அங்கிருந்த சாவியைப் போட்டு பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார்.. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகளும், வெளியில் நின்றிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்... பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தது.. பிளாட்பாரத்தில் இருந்த இரும்பு கம்பத்தில் "டமார்" என இடித்து பஸ் நின்றது.
இதை பார்த்த கதறிய பயணிகள், அலறியடித்து கொண்டு கீழே இறங்கினார்கள்.. பஸ் தானாகவே செல்வதை பார்த்த கண்டக்டரும், டிரைவரும் பதறியடித்து ஓடி வந்தார்கள்.. அதற்குள் பஸ் ஸ்டாண்டிலிருந்தவர்கள் ஓடிச்சென்று அந்த இளைஞரை பிடித்து இறக்கினர்கள்.. பிறகு, அவரை எஸ்பிளனேடு போலீஸிலும் ஒப்படைத்தனர்.
பரபரப்பு: போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை கீழ்பாக்கம் மன நல காப்பகத்தில் அனுமதித்தனர்.. மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை பிராட்வேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications