அடி தூள்! உலகத்தரத்தில் ஐடிஐ.. படித்ததுமே தொழில் நிறுவனங்களில் வேலை கன்ஃபார்ம்.. ஸ்டாலின் அசத்தல்!
சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஐடிஐகள், தொழில்நுட்ப மையங்களாக, அதிநவீன இயந்திரங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.1559.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஐடிஐ முடித்துச் செல்பவர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரத்தை உயர்த்திட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1559 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரிசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.

அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 14.06.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் முதற்கட்டமாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் 8 அன்று ஒரகடத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்துவைத்தார்.
ரூ. 1559 கோடி: 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1559 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவார்கள்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கூடுதலாக 4900 தொழிற்பிரிவிற்கான இருக்கைகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் இந்த 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். அதுமட்டுமின்றி, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழிற்நுட்பங்களை கற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications