சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயர்கல்வித்துறை இணை செயலாளராக கார்த்திகா ஐஏஏஸ்.. தமிழகத்தில் 12 ஐஏஏஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

Google Oneindia Tamil News

சென்னை :தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்மபுரி, மதுரை, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐஏஏஸ் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி ஓராண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் பொறுப்பும் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக உருவாக்கப்படுகிறது.

இதேபோல் மீன்வளத்துறை மற்றும் கரும்பு வளர்ச்சி துறையிலும் ஓராண்டு காலத்திற்கு கூடுதல் கமிஷ்னர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. தமிழக அரசு 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ள உத்தரவு பின்வருமாறு:

மீன்வளத்துறை

மீன்வளத்துறை


1. டாக்டர், ஜக்மோகன் சிங் ராஜூ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்.
2. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளராக இருந்த மதுமதி. ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம்.
3.ஷஜான் சிங் ஆர். சவான், ரேஷன் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தற்போது மீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்.

மாவட்ட ஆட்சியர்கள்

மாவட்ட ஆட்சியர்கள்


4.சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தோடடக்கலைத்துறை மற்றும் பயிர்கள் வளர்ச்ச துறை இயக்குனராக நியமனம்.
5,கடலூர் ஆட்சியராக இருந்த சந்திரசேகர் சேகமௌரி ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளராக நியமனம்.
6.தர்மபுரி மாவட்ட ஆட்சியராக உள்ள கார்த்திகா, உயர்கல்வித்துறை இணை செயலாளராக நியமனம்.
7.மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கரும்பு வளர்ச்சி துறை கூடுதல் ஆணையராக நியமனம்.

ஆஷிஷ் சாட்டர்ஜி

ஆஷிஷ் சாட்டர்ஜி


8.மாநில திட்டங்கள் நலத்துறை இயக்குனர் அமிர்தஜோதி, கார்ப்பரேசன் மற்றும் உணவு, நுகர்வோர் நலத்துறை இணை செயலாளராக நியமனம்.
9.மத்திய பெட்ரோல் மற்றம் இயற்கை எரிவாயு துறையின் இணை செயராளராக இருந்த ஆஷிஸ் சாட்டர்ஜி, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்-II ஆக நியமனம்.
10.கடல்வாரியத்தின் துணை சேர்மன் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி கிறிஸ்துராஜ், தற்போது பொது மற்றும் மறுவாழ்வு நலத்துறை துணை செயலாளராக நியமனம்

சிவில் சப்ளை

சிவில் சப்ளை

11.பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி காம்பாலே, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் முதன்மை செயலாளராக நியமனம். 12. தமிழக சிவில் சப்ளை துறை ஆணையராக இருந்த சுதா தேவி, தமிழ்நாடு நீர்நிலை வளர்ச்சி துறை இயக்குனராக நியமனம்

English summary
Government of Tamil Nadu orders transfer of 12 IAS officers, dharmapuri dictrict collector S.P Karthikaa IAS transfer to higher education department joint secretary/
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X