Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பள்ளிகளில் தமிழகம், டெல்லிதான் பெஸ்ட்.. பல மாநிலங்கள் மாணவர்களிடம் காசு கேட்கின்றன: கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து அரசுப் பள்ளி மாணவர்களிடம் மாதம் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

புதுமைப் பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டம்

தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்


சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இவரை கல்லூரியின் வாசலுக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

புரட்சிகரமான திட்டம்

புரட்சிகரமான திட்டம்

இதனைத்தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் புரட்சிகரமான திட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முன்னோடி திட்டமாக விளங்க போகிறது. மார்ச் மாதத்தில் டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

 பெண் கல்வி

பெண் கல்வி

எனக்கு வியப்பாக இருந்தது. அதன்பின்னர் அவரை அழைத்துக்கொண்டு, அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க அழைத்து சென்றேன். இந்தியாவில் பலர் வறுமையால் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக அறிவார்ந்த பெண்கள் வறுமையாக் உயர்கல்வியை கைவிடுகின்றனர். நாட்டில் 27 கோடி மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அதில் 18 கோடி மாணவிகள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களில் உயர்கல்விக்கு செல்வோர் மிகவும் குறைவு.

அரசுப் பள்ளிகள்

அரசுப் பள்ளிகள்

நம் நாட்டில் உள்ள 66 சதவிகித அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளது. பிறகு எப்படி இந்தியா முன்னேறிய நாடாக மாறும். நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு தரமான, இலவசமான கல்வியை வழங்குவது தான் அரசின் முதல் கடமை. கடந்த 75 ஆண்டுகளில் கல்வியின் தரத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், 5 ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியை நம்மால் கொடுக்க முடியும்.

அரசுப் பள்ளிகளில் கட்டணம்

அரசுப் பள்ளிகளில் கட்டணம்

ஒரு சில மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களால் எப்படி இந்த கட்டணத்தை கட்ட முடியும். ஏழை மாணவர்கள் கல்விக்காக எங்கு செல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அழைத்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+