Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல லட்சம் இன்சூரன்ஸ்! அதிகாலையே நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு! போன சூப்பர் மெசேஜ்! அசரவச்சிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ESIS திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்.. AB-PMJAY திட்டத்தின் கீழும் பயன் பெற முடியும் வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளனர்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், AB-PMJAY உடன் ESIS இன்சூரன்ஸ் திட்டத்தை இணைப்பார்கள். இதன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ESIC/ESIS பயனாளிகள் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள். இது அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் மருத்துவமனைகள் வழங்கும் சேவைகளை அணுகுவதில் உள்ள வேறுபாடுகளை நீக்கி, பயனாளிகள் எந்த ஒரு AB-PMJAY மருத்துவமனையிலும் திறம்பட சிகிச்சை பெற முடியும்.

insurance delhi narendra modi

ESIS என்பது அரசு வழங்கும் காப்பீடு திட்டம் ஆகும். இந்தியாவில் உள்ள ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டம் (ESI) நோய், மகப்பேறு, இறப்பு மற்றும் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குகிறது. தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், சினிமாக்கள், செய்தித்தாள்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் மருத்துவ நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு ESI திட்டம் பொருந்தும். மாதம் ₹21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ESI திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ESIS திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்.

இன்சூரன்ஸ் மாற்றம்: இது போக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை (AB PM-JAY) எனப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் முக்கியமான புரட்சியாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் வருமான அளவிலான கட்டுப்பாடுகள் இல்லாமல் கொண்டு வரப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் என்ன மாதிரியான வருமானம் வாங்கினாலும் , இந்த இன்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கவர் ஆகும். முன்னதாக, AB PM-JAY திட்டத்தின் கீழ் 40% மக்கள் மட்டுமே பயன் அடைந்தனர். இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது, ​​இந்த விரிவாக்கம் மூலம் கூடுதலாக 6 கோடி நபர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாடு முழுக்க 4.5 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளனர்.

70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு பயனாளிகள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இவர்கள் இந்த திட்டத்தின் கீழ் புதிய ஹெல்த் கார்டைப் பெறுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+