அமைச்சரவையில் யார் இருக்கவேண்டும் என முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை.. கொதித்து எழுந்த கனிமொழி!
சென்னை: அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும்அதிகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை என்று திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆளுநர் செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசின் ஆட்சி அதிகாரத்திலும், கொள்கை முடிவுகளிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிடுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆளுநருக்கு எதிராகவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தியது திமுக.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். இதனால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தி, மீண்டும் ஆளுநருக்கு இலாகா மாற்றம் குறித்த பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலை கண்டித்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி.
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 16, 2023
கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications