முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை! நீண்ட நேரம் கரம் கூப்பி கும்பிட்ட ஆளுநர் ரவி! வியந்த அதிகாரிகள்!
சென்னை: ராஜ்பவனில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு ஆளுநர் ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது நீண்ட நேரம் முத்துராமலிங்கத் தேவர் படத்தின் முன்பு இருகரம் கூப்பி கும்பிட்டுக் கொண்டே இருந்தார் ஆளுநர்.
இதன் மூலம் முத்துராமலிங்கத் தேவர் மீது எந்தளவு தாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.

முத்துராமலிங்கத் தேவர்
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆண்டுதோறும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பசும்பொன் கிராமம் சென்று அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.

ஆளுநர் ரவி
அந்த வகையில் திமுக சார்பில் துரைமுருகன் தலைமையில் மூத்த அமைசர்களும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும், காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனிடையே சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு ஆளுநர் ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

ராஜ்பவன்
அதுமட்டுமல்லாமல் முத்துராமலிங்கத் தேவர் படத்தின் முன்பு நீண்ட நேரம் இருகரம் கூப்பி மனமுருக கும்பிட்டிார் ஆளுநர் ரவி. இதன் மூலம் தேவர் மீது தாம் எந்தளவு மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறேன் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார். இதனிடையே இதனை பார்த்த ராஜ்பவன் அதிகாரிகளும், ஊழியர்களும் தேவர் மீது ஆளுநர் வைத்திருக்கும் மரியாதையை எண்ணி வியந்தனர்.

முக்கியத்துவம்
ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு அவர் மரியாதை செலுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications