இனி ஒரு நொடியும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது..திருமாவளவன்
சென்னை: திமுக அரசுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக மத்திய அரசு காய் நகர்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு நொடியும் தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது என்றும் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்றைய தினம் ஆளுநர் உரை வாசித்தார். திமுக அரசு எழுதிக்கொடுத்தவைகளை வாசிக்காமல் சில வார்த்தைகளை விட்டு விட்டார். பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிடவில்லை. திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்கிறது என்ற வார்த்தைகளையும் ஆளுநர் வாசிக்கவில்லை.

ஆளுநர் பேசியது சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அரசு தயாரித்த உரையே சட்டசபை குறிப்பில் இடம் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையை விட்டு வெளியேறியதும் விவாதப்பொருளாகியுள்ளது.
இதனிடையே தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் வெளியேறியதும் பேசுபொருளாகியுள்ளது. தேசத்தையே அவமானப்படுத்தி விட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி என்று சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலரும் ஹேஷ்டேக் பதிவிட்டு ட்ரண்ட் ஆக்கி வருகின்றனர்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநரின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநரின் போக்குகள் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

தேசிய கீதம் இசைப்பதற்கு முன் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். ஆளுநர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியில்லை, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவள், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த ஆளுநர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இன்றைய தினம் நடைபெற்றது ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கருத்து மோதல் அல்ல; கருத்தியல் மோதல் என்றார். திமுக அரசுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக மத்திய அரசு காய் நகர்த்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு நொடியும் தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications