ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்ணா நீங்கள்?- ஐந்து ஆடுகள் இலவசம்: அரசாணை வெளியானது
ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் 38800 பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசமாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 38,800 ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் பயனடைவார்கள். சென்னை இத்திட்டத்தில் வராது.

ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக்கும் திட்டம்
ஆதாரவற்ற நிலையில் சமுதாயத்தில் வாழும் பெண்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை, திட்டங்களை அறிவித்து அமல்படுத்தி வருகிறது. சமூக நலத்துறைச் சார்பில் வெவ்வேறு வகைகளில் பெண்கள், குழந்தைகள், தொழில் முனைவோர், சிறுபான்மை இன பெண்கள் திருமண உதவி திட்டம், விதவைகள் மறுமண திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என பல்வேறு திட்டங்கள் உள்ளன.
ஏழை, விதவை, ஆதரவற்றோர் உதவி திட்டங்கள்
தமிழக அரசின் சமூக நலத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்கள் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர ஆதரவற்றோர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், ஏழைப்பெண்கள் படிப்புக்கு உதவி, பட்ட மேற்படிப்புக்கு உதவி, பெண்கள் திருமண உதவித்திட்டம் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.
முதியோர், விதவை, ஆதரவற்ற பெண்களுக்கான உதவி தொகைகள்
பெண்களுக்காக ஆதரவற்றோர், முதியோர், விதவைகளுக்காக மாதம்தோறும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் முதல் கையெழுத்தாக போட்டார். இதன்மூலம் வீட்டு வேலை செய்யும் பெண்கள், சிறு தொழில் செய்யும் பெண்கள், விவசாய கூலிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மாதம் 1000 முதல் 2000 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடிந்துள்ளது.
விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டமும் இலவச ஆடுகள் வழங்கும் திட்டமும்
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கிராமங்களில் வாழும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டங்கள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது ஆதரவற்ற பெண்கள் வாழ்வில் முன்னேற இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 38000 பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியுள்ள பெண்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையின் விவரம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த/ கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு 75.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு 5 செம்மறி ஆடுகள்/ வெள்ளாடுகள் வழங்கப்படும். இதில் சென்னை மாவட்டத்தை தவிர மீதமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைவார்கள்". எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications