Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு வாடகைக்கு விடுறீங்களா? வாடகைக்கு எடுக்குறீங்களா? முதல்ல இதை பாருங்க.. அடியோடு மாறும் விதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டு வாடகை விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ளாவிட்டால் நஷ்டம் பலருக்கும் ஏற்படலாம். புதிதாக வீடு வாடகைக்கு எடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

புதிதாக வீடு வாடகைக்கு எடுக்கும்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் கூறப்படுவதை நாம் பார்த்திருப்போம். சில இடங்களில் அதிக அட்வான்ஸ் கேட்கப்படும், இன்னும் சில இடங்களில் திடீரென வாடகை உயர்த்தப்படும். இது போன்ற பிரச்சனைகளை பலர் எதிர்கொண்டிருப்பர்.

house

இத்தகைய குழப்பங்களைத் தீர்க்கும் விதமாக, அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் "வாடகை சட்டம் 2025" (Model Tenancy Act). இந்தச் சட்டத்தின் மூலம் பல விதிமுறைகள் மாறவுள்ளன.

வாடகை சட்டம் 2025"

புதிய வாடகை வீட்டிற்கு செல்லும்போது, நாம் எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்? வாடகை எப்போது உயர்த்தப்படும்? வாடகை ஒப்பந்தம் அவசியமா இல்லையா? இவை அனைத்தும் முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எந்தக் குழப்பமும் இருக்காது அல்லவா?

அத்தகைய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே மத்திய அரசு இந்தக் புதிய வாடகை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் சில தெளிவான விதிமுறைகள் பொருந்தும்.

இதுநாள் வரை, நமது நாட்டில் வீட்டு வாடகை பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வாய்மொழி ஒப்பந்தங்கள் அல்லது சிறிய காகித ஒப்பந்தங்கள் மூலமே நடந்து வந்தன. இதனால் முன்பணம், வாடகை உயர்வு போன்ற விஷயங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான நடைமுறை இருந்தது. பலருக்கு தங்களது உரிமைகள் என்னவென்று முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை.

வாடகை சட்டம் 2025 - புதிய சட்டம்

இந்த புதிய சட்டங்கள் மூலம், வாடகை தொடர்பான அனைத்து விஷயங்களும் துல்லியமான, வெளிப்படையான முறையில் அமலுக்கு வரும். குறிப்பாக, நகரங்களில் வாடகை வீடுகளை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தத் தெளிவான விதிமுறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புதிய விதிகளில், வீடு வாடகைக்கு எடுப்பவர்களுக்கு சில முக்கிய சலுகைகள் உள்ளன. வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல், வாடகை ஒப்பந்தம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் அதை உள்ளூர் வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களது ஒப்பந்தத்திற்கு அரசாங்க ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.

குடியிருப்பு வீடுகளுக்கான பாதுகாப்பு வைப்புத் தொகை இரண்டு மாத வாடகைக்கு மேல் இருக்கக்கூடாது. இதனால் புதிதாக வீடு வாடகைக்கு எடுப்பவர்களின் நிதிச்சுமை குறையும். வாடகையை உயர்த்தும்போது, உரிமையாளர்கள் முன்கூட்டியே அதை அறிவிக்க வேண்டும். இதனால் வாடகைதாரர்கள் மாதச் செலவுகளைத் திட்டமிட எளிதாகும்.

குடியிருப்பு வீடு

இனிமேல், வாடகைதாரர்களை திடீரென வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்க முடியாது. காலி செய்ய வேண்டுமென்றால், சட்டப்படி சரியான முறையைப் பின்பற்ற வேண்டும், அத்துடன் தகுந்த காரணமும் இருக்க வேண்டும். வாடகை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க, வாடகை தீர்ப்பாயங்கள் (Rent Tribunals) உருவாக்கப்படும். அங்கு 60 நாட்களுக்குள் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

வீட்டு உரிமையாளர்களுக்கும் புதிய விதிகளால் சில நன்மைகள் உள்ளன. வாடகை வருமானத்தின் மீதான TDS வரம்பு ஆண்டுக்கு ₹2.4 லட்சத்திலிருந்து ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர்களுக்கு விரைவாகப் பணம் கிடைக்கும்.

ஏப்ரல் 2025 முதல், வாடகை வருமானத்தை சொந்தச் சொத்திலிருந்து வரும் வருமானமாகக் காட்டுவது எளிதாகும். ஒரு வாடகைதாரர் ஓராண்டில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் வாடகை செலுத்தவில்லை என்றால், உரிமையாளர்கள் அந்தப் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க தீர்ப்பாயத்தை அணுகலாம்.

தீர்ப்பாயத்தை அணுகலாம்

குறைந்த வாடகை வசூலிப்பவர்களுக்கும், வீட்டில் சூரிய மின்சக்தி போன்ற வசதிகளைச் செய்தவர்களுக்கும் அரசாங்கத் திட்டங்களின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கலாம். வாடகைதாரர்கள் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட வாடகை ஒப்பந்தத்தைப் பெற வேண்டும்.

வாடகை, வைப்புத்தொகை மற்றும் பிற விதிமுறைகள் அனைத்தும் தெளிவாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இ-ஸ்டாம்பிங் தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

புதிய விதிகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன், அனைத்து விதிமுறைகள் குறித்தும் ஒருவருக்கொருவர் விரிவாகப் பேசிக்கொள்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+