Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் 2 லட்சம் சம்பளம்! நீயா ? நானா? வைரல் நாயகன்! இன்று என்ன செய்கிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் 2 லட்சம் சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, விவசாயம் செய்யப் போகிறேன் என்று பேசியவர் கௌதம் பாலாஜி.

அவரை பலரும் மறந்து இருக்க முடியாது. பலரையும் பாதித்தது அவரது பேச்சு. அன்றைக்கு மட்டுமல்ல; இன்றைக்குக்கூட மாதம் 2 லட்சம் என்பது மிகப்பெரிய சம்பளம். அதை வேண்டாம் என இடது கையால் உதறிவிட்டு வந்தவர்.

Gowtham Balaji, a young man who leaves his salary of 2 lakhs a month to farm

டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த வாரம் இவர்தான் வைரல் நாயகன். அதன்பின்னர் 'நல்லக் கீரை' என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். இப்போது திருவண்ணாமலை பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது வீடியோ அடிக்கடி வைரலாக பலரால் பரப்பப்பட்டு வருகிறது. அந்த கார்பரேட் கௌதம் இன்று மனதிற்குப் பிடித்தமான விவசாயியாக வாழ்ந்து வருகிறார். எப்படி உள்ளது அவரது வாழ்க்கை?

"அடிக்கடி அந்தப் பழைய வீடியோவை பலரும் திடீரென்று வைரலாக்குவார்கள். இப்படிக் கடந்த 12 ஆண்டுகளாக அந்த வீடியோ திரும்பத் திரும்ப வைரலாகும் போது எல்லாம் நண்பர்கள் உறவினர்கள் எனக்கே அதை அனுப்புவார்கள்.

Gowtham Balaji, a young man who leaves his salary of 2 lakhs a month to farm

அதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். நான் அந்த முடிவை எடுக்கும் போது வழிகாட்டுவதற்கு நிறையப் பேர் இருந்தார்கள். அந்தத் தைரியத்தில்தான் அந்த2 லட்சம் சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விவசாயம் பார்க்க வந்தேன்.

கல்லூரியில் படித்து முடித்தவுடனே எனக்கு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டது. 2006இல் எனக்கு 22 ஆயிரம் சம்பளம். வேலை கிடைத்த அன்றே கிரெடிட் கார்டும் கிடைத்துவிட்டது.

பணம் கையிலிருந்தால் சும்மா இருப்போமா? எவ்வளவு தேய்க்க முடியுமோ தேய்த்து கடன்காரன் ஆனேன். அப்போதே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்தது. நாம் செய்கின்ற வேலைக்குத் தகுதியான சம்பளம் தானா இது என்று அடிக்கடி யோசிப்பேன்.

Gowtham Balaji, a young man who leaves his salary of 2 lakhs a month to farm

சம்பளமா? சுதந்திரமா? என முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம். அப்ப சுதந்திரம் தான் முக்கியம் என யோசித்து விவசாயம் செய்ய வந்துவிட்டேன்.

அந்த நீயா நானா? நிகழ்ச்சி பேசிய பிறகு சொந்தமாக விவசாயம் செய்து நிறைய அனுபவம் பெற்று இருக்கிறேன். சிலதை இழந்தும் இருக்கிறேன். கடைசியில் பார்த்தால், நிம்மதியாக இருந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிக்குப் பின் தினம் 80 பேர் தொலைபேசி செய்வார்கள். நானும் அதை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் திண்டாடினேன். வீட்டில் தினம் நான் மணிக்கணக்காக போன் பேசுவதைப் பார்த்து 'இவன் வேலைக்கு ஆகமாட்டான். நாம் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வோம்' என்று மனைவி முடிவெடுத்துவிட்டார்.

Gowtham Balaji, a young man who leaves his salary of 2 lakhs a month to farm

பிறகுதான் இவர்கள் ஏதோ மீடியா புகழில் பேசுகிறார்கள் எனப் புரிந்தது. அதிலிருந்து வெளியே வரவே பல நாள் ஆனது. அதன்பின்னர் ஒருவழியாக மனதை ஒருநிலைப்படுத்தி, விவசாயத்தைத் தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கினேன்.

அங்கிருந்து நிறைய இயற்கை வேளாண்மை சார்ந்த நபர்களைப் போய் சந்தித்தேன். நேரடியாக விவசாயிகளைப் போய் சந்தித்தேன். அதன்பிறகுதான் எனக்கு என்ன தேவை எனப் புரிந்தது.

கிராமத்திலிருந்தவரை எனக்கு என்ன வேண்டுமோ அதை நானே செய்து கொண்டேன். ஆனால் நகரத்திற்குச் சென்ற பிறகு, பல் தேய்க்க வேண்டும் என்றால் கூட எனக்கு ஒரு பேஸ்ட் வேண்டும். பிரஷ் வேண்டும் என்பது புரிந்தது. என் தேவைக்காக நான் பலரைச் சார்ந்து வாழ வேண்டி இருந்ததை உணர்ந்தேன்.

Gowtham Balaji, a young man who leaves his salary of 2 lakhs a month to farm

அதன் பின்ன என் தேவைகளை நானே நிவர்த்தி செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்பின் உருவானது தான் இந்தப் பண்ணை" என்கிறார் கௌதம் பாலாஜி.

இவர் மொத்தம் 3 ஏக்கரில் விவசாய நிலம் வைத்துள்ளார். அதில் 50 சென்ட் நிலத்தில் பறவைகள் மற்ற ஜீவராசிகள் வந்து வாழ்வதற்காக ஒதுக்கி வைத்துள்ளார். அடுத்து ஒன்றரை ஏக்கரில் நெல், பச்சைப் பயிர் விதைத்து விவசாயம் செய்து வருகிறார்.

மீதியாக உள்ள நிலத்தில் பருவத்திற்குத் தக்க தானியங்களை விதைத்து அறுவடை செய்து வருகிறார். அதில் உளுந்து, பாசிப்பருப்பு, மிளகாய் கூடவே விளைவிக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+