கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் முதல் செல்வ மகள் சேமிப்பு வரை! ஆச்சரியம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்
சென்னை: அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புக்காகவும், குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காகவும், வயதான காலத்தில் பண பலன்களை பெறுவதற்காகவும் அஞ்சல் நிலையங்கள் நிலையங்கள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த போஸ்ட் திட்டங்களில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன் பலன்களை பெறுவதால்தான், சேமிப்பு திட்டங்களுக்கான தேவைகள் பெருகியபடியே உள்ளன. அவைகளில் ஒருசில திட்டங்களை பற்றியும், அந்த திட்டங்களின் பலன்களை பற்றியும் இங்கு பார்ப்போம்.
எதிர்காலத்தை நினைத்து கலங்காதவர்களே கிடையாது. அதிலும் வயது முதிர்ந்த காலத்தில் பணப்பாதுகாப்பு அனைவருக்குமே அவசியமாகிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி முதல் திருமணம் முதல் செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவே செய்கின்றன.

எனவே, குடும்பத்தில் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதற்கும் இங்கு பணம் தேவையாக உள்ளது.. இதனை கருத்தில் கொண்டே சேமிப்புகளை நாட வேண்டியிருக்கிறது,
ஒரு வங்கியில் கணக்கை வைத்திருப்பதை போலவே, போஸ்ட் ஆபீஸ்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்கிறார்கள். அரசுக்கு சொந்தமானவை என்பதால், தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளில் சிறந்த வருமானமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது..
திட்டங்கள் என்னென்ன
அதுமட்டுமல்ல, முதலீடு செய்த பணத்தை நினைத்து கவலைப்படவும் தேவையில்லை.. பணத்துக்கான உத்தரவாதமும், பாதுகாப்பும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும் என மொத்ததும் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதுடன், அவைகளின் பலனும் பன்மடங்காக திரும்ப கிடைக்கிறது..
அந்தவகையில், தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற 9 வகையான திட்டங்கள் அமலில் உள்ளன.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
இதில் Senior Citizen Saving Scheme என்று சொல்லக்கூடிய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்ற திட்டத்தை பொறுத்தவரை, எதிர்கால பணப்பலனை தரக்கூடியது, இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குரியது. விருப்ப ஓய்வு பெற்றவர்களும் , சூப்பர்ஆனுவேஷன், சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்டவர்களும் இந்த திட்டத்தில் இணையலாம்.
1 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் என்றால், காசோலை மூலம் அக்கவுண்ட்டை துவங்க முடியும். அதிகபட்சமாக ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம். இதில் இணைந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது.. அந்தவகையில் இத்திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம்
செல்வ மகள் சேமிப்பு
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற திட்டமானது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துவங்கப்பட்டதாகும். செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்ற இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.. ரூ.250 செலுத்தி கணக்கை துவங்கலாம். அதிகபட்சமாக ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
Fixed deposit என்று சொல்லக்கூடிய நிலையான வைப்பு தொகை திட்டமானது, வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது..
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings Certificate) எனப்படும் "பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" திட்டமானது, பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2,0000 லட்சம் முதலீடு செய்யலாம்.
மூன்று மாதத்துக்கொருமுறை வட்டி, கணக்கில் வரவு வைக்கப்படும். டெபாசிட் தொகை, முதலீடு செய்த தேதியிலிருந்து 2 வருடம் கழித்து முதிர்வடையும். இந்த கணக்கை துவங்க பெண்களுக்கு வயது வரம்பு இல்லை..
கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்
கிராமப்புற நலனில் எப்போதுமே மத்திய அரசு கூடுதல் அக்கறையை காட்டி வருகிறது. அந்தவகையில், அஞ்சல் அலுவலகத்தின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுவது கிராம் சுரக்ஷா யோஜனா திட்டமாகும்..
இந்த கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமானது, கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் உதவுவதற்காகவும், அவர்களது காப்பீடு அறிவை வளர்ப்பதற்கும் துவங்கப்பட்ட திட்டமாகும். நாள்தோறும் ரூ.50 வீதம், மாதத்துக்கு ரூ.1500 வரை முதலீடு செய்ய வேண்டும்.. இதனால், மெச்சூரிட்டி பணமாக 35 லட்சம் வரை எளிதாக பெறலாம்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications